நிலாப்பெண் நீ...
இரவின்
இருட்டு வெளிச்சத்தை
மொத்தமாய்
குத்தகைக்கு எடுத்து,
ஒட்டி வைத்ததுபோல்
உன் கூந்தல்...
சின்ன சின்னதாய்
வானத்தில்
சிதறிக்கிடக்கும்
நட்சத்திரங்களை விட
அழகாய் ஜொலிக்கிறது...!
உன் கண்கள்...
இரவு ஒளியின்
இறுதித் துளியையும்,
முழுவதும் மறைக்கும்
மேகக் கூட்டங்களைபோல்
உன் தாவணி வளைவுகள்...
இரவின் வெற்றிடத்தை
சத்தமில்லாமல்
வருடிச்செல்லும்,
காற்றை போல சுகமாய்,
உன் விரல்கள்...
மழைக்கால இரவில்,
வானத்தின் மூலையில்
வந்து செல்லும்
மின்னலை விட
சக்தி கொண்டது...!
உன் முத்தம்...
நடு இரவில்
இருட்டில் பரவிக்கிடக்கும்
நிசப்தத்தை விட
இனிமையானது...!
உன் பேச்சு...
இரவு முடிந்து
விடியும் வரை
இருட்டு தழுவிக்கிடக்கும்
வானமாய்,
உன் மேனி...
இருட்டாய் - என்
இரு கைகள்...
அத்தனை அழகையும்
மொத்தமாய் சுமந்து,
இரவிலும் - என்
இதயம் முழுவதும்
வெளிச்சம் பாய்ச்சும்
நிலாப்பெண் நீ...
----அனீஷ் ஜெ...
Hi Anish valakam pola ithuvum nalla iruku
ReplyDeleteaval nila pen alla electric pennava erukulam adan short circuit aayidchu ....:)))) strong current adichidu :)...fuse um poidchu
ReplyDeletenalla eruku:(
ReplyDeleteஆஹா ஆஹா என்னா ஒரு கற்பனை....
ReplyDeleteவெயிட் பண்ணுங்க கவிக்கா, 2012 க்குப் பிறகு உங்களுக்கு ஒரு இதே நிலாப்பெண் கிடைப்பா... அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
இரவில் இத்தனை விசயங்கள் இருக்கிறதா.?
ReplyDeleteஇரவை பெண்ணுடன் அழகாய் ஒப்புமைபடுத்தியிருக்கிறீங்க
/இருளாய் என் இரு கைகள்/
அதென்ன உங்கள் கை அவ்வளவு கறுப்பாகவா இருக்கு இருள் மாதிரி? ஹிஹி
@minu: ரொம்ப நன்றி !!
ReplyDelete@anishka nathan: ஓஓ அப்படியா..? எலக்ட்ரிக் பெண், ஸ்ட்ராங் கரெண்ட் இதெல்லாம் ஓகே... ஆனா யாருக்கு பியூஸ் போயிடிச்சு?
ReplyDelete@anishka nathan: ரொம்ப நன்றி !!
ReplyDelete@athira: ஓ 2012 க்கு பிறகா? அப்போ கண்டிப்பா கிடைப்பா... எங்கே மேல சொர்க்கத்தில் தானே...?
ReplyDeleteஹ்ம்ம்ம்ம் ரொம்ப நன்றி...!!
@Monika: ஆமா ஆமா... கை அவ்வளவு கறுப்பா இருள் மாதிரிதான் இருந்திச்சு... அதனால பெயிண்ட் வாங்கி அடிச்சிட்டேன்...! இப்போ சரி ஆயிடிச்சு...! :)
ReplyDeleteகருத்துக்கு ரொம்ப நன்றி...!!
ஒரு பெண்ணின் ஒவ்வோர் அழகின் துளித் துளி வர்ணணைகளாலும் கவிதையாக இங்கே நிலாப் பெண் வடிக்கப்பட்டிருக்கிறாள்.
ReplyDeleteகவிதையில் வர்ணணைகளிற்கேற்றாற் போல, அணிகளும் வந்து விழுந்திருக்கின்றது,
ReplyDelete’வானமாய் உன் மேனி....
உயர்வு நவிற்சி அணி இங்கே கவிதைக்கு மேலும், மேலும் அழகு சேர்க்கிறது.
பெயிண்ட் அடித்தீங்களா ? ஆனால் என்ன நிற பெயிண்ட் அடித்தீர்கள் என சொல்லவே இல்லையே... மறுபடியும் கறுப்பு நிர பெயிண் தான் அடித்தீர்களா? ஹிஹி
ReplyDelete@நிரூபன்: ரொம்ப ரொம்ப நன்றி !
ReplyDelete@Monika: ufffffffffffff... கறுப்பு நிற கை என்றால் மறுபடியும் எதுக்கு கறுப்பு கலர் அடிக்கணும்...! இது வேற வேற வேற கலர்...! :)
ReplyDeleteநல்ல கவிதை. உங்களிடமிருந்து மேலும் பல பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.
ReplyDelete@க.அசோக்குமார்: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி
ReplyDelete