19 May 2011

காதல் உணராதவன் !


நிலாத்துண்டை
வெட்டியெடுத்து
ஒட்டிவைத்ததுபோல்
அவள் முகம்...!

ஐந்தடி அதிசயமாய்,
நடமாடும் மலர்வனமாய்
அவள் அழகாகவே இருந்தாள்...!

அழகின் எல்லையே
அவளாக கூட இருக்கலாம்...!
அவ்வளவு அழகு அவள்...

சுருண்ட கேசம்...!
உருண்ட கண்கள்...!!
ஆறடி உயர்ந்த தேகம்..!!!

அவளைவிட அவன்
அழகில்லையென்றாலும்,
அவனும் அழகுதான்...!

காதலுக்குள்
இருவரும் சிக்கிக்கொண்டு
காலங்கள் பல
கரைதோடியிருந்தன...!

தனிமையில் இருவருக்கும்
நினைவுகளும்,
சந்தித்தால் குரல்களோடு
முத்த சத்தங்களுமே சாப்பாடு...!

அவர்களுக்கிடையில்
விவாதங்கள் கூட
சண்டைகளாய் நீண்டு
கொஞ்சல்களாய்தான் முடியும்...!

கோப வார்த்தைகளில் கூட,
இரு மனசின் இடைவெளிகளில்
இவர்கள்
பிரிவு நுழைய அனுமதித்ததில்லை...!

அவன் கை வலிக்க,
பேனாவின் கால் வலிக்க
அவன் எழுதும் கவிதைகளுக்கு
அவள் அடிமை...!
அவளின் அன்புக்கு
அவனோ கொத்தடிமை...!

இவர்கள் இருவரும் - என்னை
நல்ல நண்பனாக
அடையாளப்படுத்தியிருக்கிறார்கள்...!
அவர்களும் எனக்கு
நல்ல நண்பர்களாக...

காலமெனும் பெரும்புயலில்
சிக்கி சின்னாபின்னமாகி
திசைமாறி போன வாழ்க்கை...!

வருடங்கள் பல தாண்டியும்
இப்பொழுதும் - நான்
அவர்கள் இருவரையும்
ஆங்காங்கே சந்திப்பதுண்டு...!

அவனுக்கு அழகுசேர்த்த
சுருண்ட கேசம்
முற்றிலும் காணாமல்போய்
வெற்றிடமாயிருந்தது...!

ஆறடி தேகமும்,
அவனது காலும்
ஓரடி எடுத்துவைக்கவே
படபடவென தடுமாறியது...!

இப்பொழுது அவன்
கவிதைகளை கிறுக்கியே
காலந்தள்ளுகிறான்...!
வரிகள் ஒவ்வொன்றிலும்
அவளே உயிர்வாழ்கிறாள்...!

அவளின் நிலா முகத்தில்
முதுமையென்னும்
அமாவாசையின்
அடையாளங்கள் தெரிந்தது...!

மூக்கு கண்ணாடியும்
சுருங்கிய முகமுமாய்,
அவளின் அழகு
அடியோடு மறைந்துபோயிருந்தது...!

என்னை கண்டதும்
அவளின் நலம் விசாரிப்புகள்
ஆரம்பமானது...!
அவனின் நலமறியவே
அவள் காத்திருந்ததுபோல்
அவள் வார்த்தைகள் எல்லாம்
அவனையே உதிர்த்தன...!

நான் என்
வீடு வந்து சேர்ந்தபின்பும்
என் மனசு
கனத்துக்கொண்டே இருந்தது...!

தூக்கம் வராத,
அந்த இரவில் - எனக்கு
அவர்கள் இருவரின்
பிம்பங்களே தெரிந்தது...!

உயிருக்குயிராய்
காதலித்து திரிந்தவர்கள்,
பிரிந்துபோய் இன்று
வெவ்வேறு திசைகளில்...

அழகுடன் சேர்த்து
காதலையும்
தொலைத்துவிட்டு
இவர்களின்
வாழ்க்கை தொடர்கிறது...!

இதுதான் காதலா என
காதல்மேல் எனக்கு
கோபமே வந்தது...!

காதலிக்காததாலென்னவோ,
முதுமையானபின்பும்
காதலின் அர்த்தம்
எனக்கு புரியவில்லை...!

உருண்டுபுரண்டு படுத்தும்
தூக்கம் வரவில்லை...!

தூக்கத்தை தொலைக்கும்
எததனை இரவுகள் வந்தாலும்
காதலிக்காத நான்
உணரப்போவதில்லை...!
அவளை பற்றிய
அவன் கவிதைகளிலும்,
அவனை பற்றிய
அவள் விசாரிப்புகளிலும்,
அவர்களது அழகான காதல்
இன்னும் உயிர்வாழ்கிறது என்பதை...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

12 comments:

 1. anishka nathanMay 19, 2011 11:41 am

  super kavidai..rendu kadalargalum miss and mr universe dan...ada ninga romba azhga varnitirkinga....ninga kadalikkamal epadi oru kavidai ezhudiringa...kadalichhal kavidai epadi erukumo?......varumkalatil ungaluku kadalikka eden idea erunda....hmmmmm....5.3 ft...neela madari mugam dan enaku.......azhagu elle nu solla matanga yarum......

  ReplyDelete
 2. உங்கள் தனி ஸ்டைலில், உங்கள் பாணியில் மீண்டும் அசத்தல் கவிதை அனீஷ். எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க? அட்டகாசம்.
  அனிஷாநாதன் கேக்குறது கரக்ட்தான். நீங்க வயசாயிட்டாலும், காதலிக்காமா எழுத முடியாதே இப்படி ஒரு கவிதை. காதலிக்காம இருப்பதை பற்றி கவலைபடாதீங்க. நிறையபேர் ரெடியா இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 3. @anishka nathan: ஓஓ... காதலிச்சு எழுதினா எப்படி இருக்கும்னு தெரியாதா? கவிதை கொஞ்சம் “காரமாக” இருக்கும் :)

  எதிர்காலத்தில் காதலிக்கிற ஐடியா இருந்தா அப்போ தொடர்புகொள்கிறேன். ஓகே? :D

  கருத்துக்கு ரொம்ப நன்றி !!

  ReplyDelete
 4. @Monika: ஆகா இரண்டு பேரும் (நீங்களும் அனிஷ்காவும்) ஒண்ணு சேர்ந்திட்டீங்களா? ஒரே கேள்வியை கேக்குறீங்க.. ஹ்ம்ம்ம் :)

  காதலிக்காம இருப்பதை பற்றி நான் கவலைப்படுறேன்னு சொல்லவே இல்லையே...! ஹ்ம்ம் என்ன சொல்றீங்க? நிறைய பேர் ரெடியா இருக்காங்கனு நினைக்கிறீங்களா? அச்சச்சோ... இப்படி எல்லாம் தப்பு தப்பா நினைக்காதீங்க..

  கருத்துக்கு நன்றி !!

  ReplyDelete
 5. Very nice Anish...
  Marubadium oru eluthu pizhai in the 9th line from bottom... ;)
  epdi than en kaanuku mattum theriuthonu therila...
  correct pannidunga Anish...:T
  vazhakkam pola Kalakureenga...!
  :) :C :)

  ReplyDelete
 6. @prabhakaran: வருகைக்கும் கருத்துக்கு ரொம்ப நன்றி...! :)

  ReplyDelete
 7. @Kaavya: வருகைக்கும் கருத்துக்கு ரொம்ப நன்றி...! :)

  ReplyDelete
 8. anish romba paerisu ezuthurathai kuraiththukonga ,,, i thinnk munnadi vida ippo ezthura kavithaigal length kurainthu irukku... good...
  anish naan ungalai oppose pannala .... after marrige love thaan unmaiyanathu nnu ninaikkiren....
  ungal kavithai arumai anish.good

  ReplyDelete
 9. @kalai: சில கவிதைகள் பெருசா எழுதினாதான் நான் என்ன சொல வறேனோ அதை சரியா சொல்ல முடியுது...! ஹ்ம்ம்ம்

  திருமணத்திற்கு பிறகான காதல்தான் உண்மையானது என்ற உங்கள் கருத்தில் நாம் மாறுபடுகிறேன்...! உண்மையான காதல், அன்பு திருமணத்திற்கு முன்பு கூட கிடைக்கலாம்...!

  உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி... :)

  ReplyDelete
 10. கவிதைகள் அருமையாக இருக்கின்றது.
  வாழ்த்துக்கள்

  Kalki

  ReplyDelete
 11. @Anonymous: வாங்க...!
  வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி kalki...!

  ReplyDelete