திரும்பும் இடமெங்கும்
திருப்பங்கள்...!
எங்கு நோக்கினும்
எதிர்பாராத பதில்கள்...!!
ஆனாலும் இன்னும்
கேள்விக்குறிகளாய்தான்
நீள்கிறது...!
இந்த வாழ்க்கை...
*****
இன்னும் காத்துக்கொண்டிருக்கின்றன...!
நீ நடந்த பாதைகள்...
என்னையும்,
உன் சுவடுகளையும்
சுமந்துகொண்டு...
நீ நடந்த பாதைகள்...
என்னையும்,
உன் சுவடுகளையும்
சுமந்துகொண்டு...
*****
உன் காதலோடு - நான்
உயிர் வாழ்வதும்,
நீயின்றி நான் இந்த
மண் சேர்வதும்
உன் வார்த்தையில்தான்
உள்ளதடி பெண்ணே...!
உன் கைக்குள் நானொரு
உயிருள்ள பட்டாம்பூச்சியாய்...
----அனீஷ் ஜெ...
உயிர் வாழ்வதும்,
நீயின்றி நான் இந்த
மண் சேர்வதும்
உன் வார்த்தையில்தான்
உள்ளதடி பெண்ணே...!
உன் கைக்குள் நானொரு
உயிருள்ள பட்டாம்பூச்சியாய்...
----அனீஷ் ஜெ...
பெரிய கவிதைகளிலிருந்து குட்டி கவிதைக்கு வந்திட்டிங்ளா? எல்லாமே அசத்தலா இருக்கிறது. அதிலும் இரண்டாவது கவிதை மிக நன்று. கலக்கிறீங்க கண்ணா.
ReplyDeleteம்ம்ம் அருமை ரெம்ப நல்லா இருக்க தோழரே
ReplyDelete@Monika: ஆமா...! எழுதுற கவிதை எல்லாம் பெரிசாவே இருக்கு...!அதான் குட்டியா எழுத முயற்சித்து ஏதோ கிறுக்கிட்டேன்...!
ReplyDeleteகருத்துக்கு நன்றி...!
@செய்தாலி: ரொம்ப நன்றி தோழரே...!!
ReplyDeleteஅனைத்தையும் ரசிக்கிறேன்
ReplyDelete@Maha: ரசித்தமைக்கு நன்றி !!!
ReplyDeleteபட்டாம்பூச்சிக்கு உயிரிருக்குதுதானே? பிறகெதுக்கு இன்னும் கைக்குள்ளயே...??? பறந்திடவேண்டியதுதானே....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).
ReplyDeleteஎன்னாது தணிக்கையோ? எதுக்கு டபக் லபக் எண்டு போட்டிட்டீங்க...
@கண்டுபிடிச்சிட்டேன்:) : பட்டாம்பூச்சிக்கு உயிர் இருக்குது...! ஆனால் “கைக்குள்” அல்லவோ இருக்குது... அப்புறம் எப்படி பறப்பது..? :( So NO கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....
ReplyDeleteதணிக்கை சும்மாதான் போட்டேன்...! :D
கருத்துக்கு மிக்க நன்றி...!
good kavithai
ReplyDelete