16 May 2011

அடையாளமற்ற கைகள் !


கொஞ்சம் கனவுகளையும்,
நிறைய கவலைகளையும்
சுமந்துகொண்டு
இன்னும் உயிரோடிருக்கிறது...!
என் இதயம்...

லப் டப் என்னும்
ஒலியையும் தாண்டி,
சில நேரங்களில்
மரண வலியின்
அதிர்வுகளையும் - என்
இதயம் பிரதிபலிக்கிறது...!

உடைந்து
உருத்தெரியாமல்
போன பின்பும்,
உடைந்த இதயத் துண்டுகளில்
மகிழ்ச்சியின் துளிகளை
தேடிக்கொண்டிருக்கிறேன் நான்...!

ஏமாற்றங்களை தாங்க
ஏறத்தாழ பழகிவிட்டாலும்,
சில சமயங்களில்
சில்லென்று
உடைந்தேபோகிறது...!
என் இதயம்...

பொய் மனிதர்கள்...!
நம்பிக்கை துரோகிகள்...!
நல்ல வேளை - என்
இதயத்திற்கு கண்கள் இல்லை...!
இல்லையென்றால்
இவர்களை பார்த்தே - என்
இதயக்கண்கள் குருடாகியிருக்கும்...!

உள்ளத்திலிருந்து வரும்
உண்மையான அன்பு...!
உதடுகளிலிருந்து தோன்றும்
ஊமையான போலி அன்பு...!!
இரண்டுக்கும்
இடையேயான வித்தியாசம்
எதுவென்பது
ஏனோ என் இதயத்திற்கு
இன்னும் புரியவில்லை...!

இரத்தக்கண்ணீர்
வழிந்துகொண்டிருந்தாலும்,
மற்றவர்களுக்காக
பாச துளிகளையும்
கவிதை வரிகளையும் பிரசவிக்க
என் இதயம் ஏனோ
இன்னும் மறக்கவில்லை...!

சில மனிதர்கள் - என்
இதயத்தை உடைத்தாலும்,
எங்கிருந்தோ நீளும்
அடையாளமற்ற கைகள்
என் இதயதுண்டுகளை
பத்திரமாய் சேர்த்து
என் இதயத்தை இன்னும்
உயிர்பித்துக் கொண்டிருக்கின்றன...!

ஆயிரம் முறை
தடுக்கிவிழுந்தாலும்,
கோடி முறை
உடைந்து விழுந்தாலும்,
அன்பை சுமக்கும் - அந்த
அடியாளமற்ற கைகள்
என்னை நோக்கி நீள்வதால்தான்
இன்னும்  துடித்துக்கொண்டிருக்கிறது...!
என் இதயம்...

----அனீஷ் ஜெ...
,
SHARE THIS

9 comments:

  1. /சில மனிதர்கள் - என் இதயத்தை உடைத்தாலும், எங்கிருந்தோ நீளும் அடையாளமற்ற கைகள்/

    இதைதான் ஒரு வாசல் அடைத்தால் இன்னொரு வாசல் திறக்கும் என்று சொல்லுவார்கள். ஒருவர் கண்ணீர் விட வைத்தால் அந்த கண்ணீரை துடைக்க இன்னொருவர் வந்துவிடுவார். அதுதான் வாழ்க்கையின் அதிசயம்.

    நீங்கள் ஒரு குறிப்பிட்ட விசயத்தை எடுத்து அதை வைத்தே கவிதை எழுதுவது ரொம்ப பிடித்திருக்கிறது. குறிப்பாக மழை, இரவு, இதோ இப்பொழுது இதயம். நீங்க திறமைசாலிதான் போங்க.

    படத்தில் ஹார்ட்க்கு நிறைய பஞ்சர் ஒட்டி வைத்திருக்கிறீர்களே. எந்த கடையில் பஞ்சர் ஒட்டினீர்கள்.? ஹிஹி

    ReplyDelete
  2. இதயத்தின் உணர்வலைகளையும், பேசாப் பொருளாய் உள்ள இதயத்தின் எண்ண ஓட்டங்களையும் கவிதையில் வடித்துள்ளீர்கள்..

    வித்தியாசமான கற்பனை.

    ReplyDelete
  3. கவிக்கா.... இதயத்தில இத்தனை ஒபரேஷன், தையல் பிளாஸ்டர் இருந்தாலும், கவிதையில எந்தவித தையலோ ஓட்டைகளோ இல்லாமல் அழகாக வடித்திட்டீங்க...

    எனக்கொரு கவிதையின், ஒரு துண்டுப்பகுதி நினைவுக்கு வருது... சும்மாதான் சொல்கிறேன் படிச்சுப் பாருங்க...

    “என்னை இன்று
    ஓர் கவிஞனாக்கியது
    உன் பிரிவுதானடி
    நீ பிரிந்திராவிட்டால்
    என் கவிதைப் புத்தகம்
    வெண்ணிறத்தாள்
    பாலைவனமாகவே
    இருந்திருக்கும்”

    ReplyDelete
  4. இன்னுமொன்று, உந்த இதயத்தை உற்றுப்பாருங்க:)... பாதிக்கப்பட்ட பகுதியை விட பாதிக்கப்படாத பகுதிதானே அதிகமாக இருக்கு, ஆனா நீங்க நினைக்கிறீங்க.. எல்லாமே பாதிக்கப்பட்டுவிட்டதென... அப்படியில்லை... அதனால பாதிக்கப்பட்ட பகுதிகளும் சீக்கிரமே “எங்கிருந்தோ வரும் அடையாளமற்ற கைகளால்” சீராக்கப்பட்டுவிடும்...

    ReplyDelete
  5. @Monika: நீங்கள் சொல்வது உண்மைதான் மோனிகா...!

    சரி எதுக்கு எந்த கடைனு கேக்குறீங்க? தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க..? ஏன் உங்களுக்கும் பஞ்சர் ஒட்டணுமா?

    கருத்துக்கு மிக்க நன்றி...!

    ReplyDelete
  6. @நிரூபன்: உங்கள் வருகைக்கும், விமர்சனத்திற்கும் மிக்க நன்றி நிரூபன்...!

    ReplyDelete
  7. @athira: இதயம் இப்பொழுது சீராகத்தான் இருக்கு...! புதுசா கை வந்து உடைக்காமல் இருந்தா சரி.. :)

    பகிர்ந்த கவிதை நல்லா இருக்கு...! ஆனால் பிரிந்தபின் வரும் கவிதைகளில் “வலிகள்” நிரம்பியிருக்கும்...! ஆனால் காதலில் இருக்கும் போது கிறுக்கும் கவிதைகளில் “காதல் சுவை” வழிந்தோடும்...! வலிகள் சொல்லும் கவிதைகளை விட , காதல் சுவை தெறிக்கும் கவிதைகளே சுகமானவை...!

    கருத்துக்கு மிக்க நன்றி...!

    ReplyDelete
  8. @anishka nathan: மிக்க நன்றி...!

    ReplyDelete