1 May 2011

பயணம் தொடர்கிறது...


நீண்ட தூரம் நோக்கி,
இது ஒரு நெடும்பயணம்...!

முடிவுகளோ
கண்ணுக்கு தெரிவதில்லை...!
லட்சியம் எதுவென்றும்,
புரியவில்லை...!!

வேகம் கூட்டவும்,
திரும்பி நடக்கவும்
அனுமதியில்லை இங்கு...!

பாதை மாறுவதும்,
தவறி விழுவதும்
சகஜமாகிறது
இந்த பயணத்தில்...!

இருட்டும் வெளிச்சமும்
மாறி மாறி வந்தாலும்,
எப்பொழுதும்
இருட்டிலே நடப்பதுபோல்
உணர்வு...!

கண்ணுக்கெட்டிய தூரம் வரை
மனிதர்கள் தெரிகிறார்கள்...!
கண்ணாடி பிம்பங்களாய்...

ஆயிரம் பேர்
சுற்றி நின்றாலும்,
தனிமையில் இருப்பதுபோல் - ஒரு
தவிப்பான உணர்வு...!

எனக்கு வழிகாட்டவும்,
இருட்டிலே நடந்தால்
ஒளிகாட்டவும்,
யாருக்கும் இங்கு நேரமில்லை...!
எல்லாரும்
அவரவர் பயணங்களில்
பரபரப்பாய்...

சுமைகளும்,
வலிகளுமாய்
என் இதயம் இன்னும்
மூச்சு விட்டுக்கொண்டிருப்பதே
ஆச்சரியம்...!

போகும் பாதை
கரடுமுரடாய் இருந்தாலும்,
வாழ்க்கைப் பயணம்
சுகமாய்தான் தொடர்கிறது...!
என் துணையாய்,
என் நிழலாய்,
என்னோடு
நீ வருவதால்...

----அனீஷ் ஜெ...


SHARE THIS

15 comments:

  1. anishka nathanMay 01, 2011 11:27 am

    romba nalla eruku..vazhkai oru ninda padai dan...karadu muradu padail kai pidichu nadandal.. aduvum tunavi yodu nadandal vazhkai sugama dan pogum....continue

    ReplyDelete
  2. @anishka nathan: ஹ்ம்ம்ம்... நன்றி !

    சரி எதை continue பண்ணணும்? கை பிடிச்சு நடக்குறதையா இல்ல கவிதை எழுதுறதையா..? :)

    ReplyDelete
  3. ரொம்ப நல்லா இருக்கு வரிகள் அனைத்துமே பாராடுக்கள்

    ReplyDelete
  4. என்னோடு நீ .இருப்பதால்.....

    ..........வாழ்க்கை அழகாகிறது .. சாதிக்கக் முடிகிறது .துணை இருப்பதால்.

    ReplyDelete
  5. எப்பூடி இப்பூடியெல்லாம் எழுதுறீங்க கவிக்கா?.. நன்று... நன்று....

    ReplyDelete
  6. எப்பவுமே கைப்பிடிக்கிற நினைவுதானா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))). கவிதை எழுதுவதைத்தான் கண்டினியூஊஊஊஊஊ பண்ணுங்க... மற்றதை எல்லாம் காலம்வரும்போது பார்த்துக்கலாம் ஓக்கை?:))).

    ReplyDelete
  7. @தமிழ்த்தோட்டம்: ரொம்ப நன்றி தலிவா...!

    ReplyDelete
  8. @நிலாமதி: கருத்துக்கு ரொம்ப நன்றி அக்கா...

    ReplyDelete
  9. @athira: uffffffffffff... என்ன இப்படி கேட்டுடீங்க...? சின்ன பையன் நான்... யாரவது கைப்பிடிச்சு நடந்தாதா தானே அங்க இங்க தவறி போகாம இருப்பேன்... அதான்....

    ஹ்ம்ம்ம்... காலம் வரும்போது பார்த்துக்கணுமா...? உங்கள மாதிரி பெரிய்ய்ய்ய்ய்யவங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்...

    கருத்துக்கு ரொம்ப நன்றி...!

    ReplyDelete
  10. ஓ சின்ன பையனோ? அப்போ அம்மாவின் கையை இறுக்கமா பிடிச்சுக்கொண்டு கவிதையைத் தொடருங்க.... மீதியை 2012 க்கப்புறம் பார்த்துக்கொள்ளலாம்..... ஆஆஅ.. எங்க நாய்க்குட்டி இங்கேயும் இல்லையா தப்பி ஓட அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))).

    ReplyDelete
  11. @athira: uffffffffffffffff... ஏன் இப்படி பயப்படுறீங்க...? 2012 ல எல்லாம் உலகம் அழிஞ்சிடாது...! உலகத்தை அழிக்கிற அளவுக்கு அவ்வளவு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ரப்பர் இன்னும் கண்டுபிடிக்கல...

    ReplyDelete
  12. Dear, Nice one... continue ur kirukkalkal!!


    Edwin Singh C

    ReplyDelete
  13. @Edwin: நன்றி மை டியர் நண்பா...!

    ReplyDelete
  14. miga arumai...
    Kalakureenga...!

    ReplyDelete
  15. @Kaavya: ரொம்ப நன்றி...!!! :)

    ReplyDelete