உயிருக்கும்
உணர்வுகளுக்கும் இடையேயான
உலகப்போர் இது...!
இரவில் சூரியன் சுடுவதும்,
பகலில் நிலா தெரிவதும்
இதில் மட்டுமே சாத்தியம்...!
பூமியில்
சொர்க்கம் தந்து செல்லவும்,
வாழ்க்கையை
நரகமாக்கி கொல்லவும்
இதற்கு மட்டுமே தெரியும்...!
உறக்கத்தை தொலைத்துவிட்டு
கனவுக்குள் தொலைவதும்,
இதயத்தை தொலைத்துவிட்டு
நினைவுகளோடு அலைவதும்,
சுகமான உணர்வாவது
இதில் மட்டுமே...
உளறல்களில் கூட
இசை சொட்டும் - இதில்
கிறுக்கல்கள் கூட
கவிதையாகி கத்தும்...!
மவுனங்களும் இங்கே
பேசிக்கொள்ளும்...!
வார்த்தைகள் சிலநேரம்
மவுனமாகி கொல்லும்...!!
சண்டைகள் கூட
முத்தத்தில் முடியும்...!
மோதிக்கொள்ளாமலே
இதயங்களும் உடையும்...!!
நெஞ்சோடு கொஞ்சம்
சிறகுகள் முளைக்கும்...!
பார்வைகளில் இதயம்
செத்து செத்து பிழைக்கும்...!!
தன்னந்தனியே சிரிக்கவும்,
தனிமையில் அழவும்,
இது மட்டுமே
கற்றுக்கொடுக்கும்...!
வானுக்கு கீழே,
பூமிக்கு மேலே - இந்த
பூகோள வெற்றிடத்தில்,
இதைபோன்ற
துன்பமுமில்லை..!
இதைப்போன்றதொரு
இன்பமுமில்லை...!
இந்த புரியாத புதிர்தான்,
காதல்...
----அனீஷ் ஜெ...

Send Your Comments on Whatsapp. Click Here
wowwwwww fantastic feeling of love
ReplyDeleteSema Kavithai Anish...! :)
ReplyDeleteKadhal oru puthir nu romba alaga eluthirukeenga...
very nice and true lines...
really awesome...
KALAKUREENGA...
:c :c :c :c :c
@anishka nathan: வந்தமைக்கும், வாவ் சொன்னமைக்கும் ரொம்ப நன்றி...! =)) :)
ReplyDelete@Kaavya: வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி...! :)
ReplyDeletevery nice, heart touching lines,
ReplyDeleteanubavichu yeluthirunkinga ponga..... yelllarum feel panradha neenga express panirukinga azhaga.......
ReplyDeleteஅழகான கவிதை
ReplyDeleteதன்னந்தனியே அழவும் தனிமையில் சிரிக்கவும் இந்த வரிகள் சூப்பர் :C
@sreeni: வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி...! :)
ReplyDelete@shamilipal: அட ;) ரொம்ப நன்றி...! :)
ReplyDelete@Monika: கருத்துக்கு ரொம்ப நன்றி மோனிகா:)
ReplyDeletemmmm,,,, appadinga ...
ReplyDelete@Anonymous: mmmm... yeppadinga? :Y
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க... :)