12 Jul 2016

எல்லை !

Scan me!

ஆண் என்பதாலென்னவோ
அழுகையை
அடக்கியே பழகிவிட்டேன்...!

பெரும் சோகங்களில் கூட
கண்ணீர்துளி கசிந்ததாய்
ஞாபகமில்லை...!

தோல்விகளையும்,
ஏமாற்றங்களையும் கூட
புன்னகையுடனே கடந்திருக்கிறேன்...!

ஆனால் இன்று...
உனக்காய்,
உன்னால்,
உன் முன்னே
கதறி அழுகிறேன் நான்...!

புரிந்துகொள்...!

என் இதயத்தின்
வலிதாங்கும் வல்லைமையின்
எல்லை இதுதான்...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

3 comments:

  1. கவிதை அருமை...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. Latest update daily

    ReplyDelete
  3. கவிதாசன்July 28, 2016 11:11 am

    காதலைப் பொறுத்தவரை ஆண்மனம் பெண்மனம் என்ற வேற்றுமை இல்லை என்பதை அருமையாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்.

    ReplyDelete