அதிகாலையில் சூரியன் மறைந்து
அந்திமாலையில் உதிக்கிறது...!
பட்டாம்பூச்சியின் வண்ணத்தை
பூவொன்று உறிஞ்சுகிறது...!
வாட்டும் வெயிலுக்கு நடுவே
வானவில்லொன்று முளைக்கிறது...!
நீண்டு பரந்த கடலோ
நதியில் பாய்ந்து கலக்கிறது...!
சீறிய புயலில் சாய்ந்த மரமொன்று
சிறு தென்றல் பட்டு நிமிர்கிறது...!
கண்மூடிய தூக்கமெல்லாம்
கனவுகள் மோதி கலைகிறது...!
வாசலில் கிடக்கும் எறும்புகளை
வண்ண கோலமொன்று மொய்க்கிறது...!
மழைநீர் விழுந்ததும்
மண் தரையும் சுடுகிறது...!
கொழுந்துவிட்டு எரியும் தீயோ
கொஞ்சம் பஞ்சு பட்டதும் அணைகிறது...!
இசையின் சப்தமொன்று
இமைகள் வழியே நுழைகிறது...!
எல்லாமே புதுவிதமாய் இருக்கின்றது...!
என்னருகில் நீ இருக்கின்றபோது...
---அனீஷ் ஜெ...
அருமை அருமை
ReplyDeleteஎங்களுக்கு உங்கள் கவிதையைப்
படிக்கும் போது...
மனம் கவர்ந்த கவிதை
மிகக் குறிப்பாய் பட்டாம்பூச்சியின்
வண்ணம் உறிஞ்சும் மலர்..
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
அருமை..
ReplyDeleteசொல் பயன் படுத்தும்விதம் அருமைதொடரட்டும் உம் கவிதைவாழ்த்துக்கள் அன்பரே
ReplyDelete