ஒரு பார்வைதான் பார்த்தான்...!
உயிரில் தீயின் துளி
கொழுந்துவிட்டு எரிகிறது...!
கூடலில்லை...!
கூடிக்களிக்கவில்லை...!!
ஆனாலும் அவன்
விழிகளால் பிரசவிக்கிறேன்...!!!
வெட்கங்களை...
அதிகாரமோ இல்லை
அடங்கிப்போவதோ
என்னை கட்டுப்படுத்த - அவன்
பார்வைகளூக்கே சாத்தியப்படுகிறது...!
அவன் கண்பார்த்து பேச
ஆசையிருந்தாலும்
மண்பார்க்கவே - என்
மனம் சொல்கிறது...!
விழிகளுக்கும் சூரியனுக்கும்
வித்தியாசமில்லை...!
கடும்பாறை என் நெஞ்சில்
பெரும் மழையாய் வழிகிறது...!
அவன் பார்த்த பார்வை...
----அனீஷ் ஜெ
Written By : Anish J.
Requested By : Havisha.
அருமை...
ReplyDeleteபார்வை விளைவித்த மாறுதல்களும்
ReplyDeleteஅது தந்த கவிதையும் மிக மிக அருமை
வாழ்த்துக்களுடன்...
அருமை
ReplyDeleteஎன் காதலியின் அன்புப்பார்வையும் இதே தான் கவிஞரே......
ReplyDeleteஅருமை
ReplyDeleteமிக அருமை நண்பா
ReplyDeleteமிக அருமை
ReplyDeleteSuper
ReplyDeleteகாதல் கவிதை நூல்கள் எனக்கு பிடித்து
ReplyDelete