
கடற்கரை மணல்பரப்பில்
கால்கள் பதித்து சென்றாய் நீ...!
கையொப்பமிட்டதாய் நினைத்து - அதை
கட்டியணைத்தது கடல் அலை...!
ஆழமில்லா கடல் நீரில் நான் கால் வைத்தேன்...!
அலை அடித்தது....!!
அதே நீரில் நீ கால் வைத்தாய்...!
அலை ஆரத்தழுவியது...!!
கடல் நடுவில் உருவான
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வன்புயலாக மாறலாமென
வானொலிபெட்டி சொல்கிறது...!
கடற்கரை பக்கம் வந்து செல்...!!
கடும்புயல் தென்றலாகும்
காட்சிகள் நிகழட்டும்...!!!
நீண்டநேரம் கடற்கரையில்
நின்றுவிடாதே நீ...!
மணற்பரப்பின் மீது
மலரொன்று முளைத்ததாய்
காண்பவரெல்லாம்
கருதப்போகிறார்கள்...!
உன் காலடி மணலை
அள்ளிச்சென்ற அலைகள்
ஆழ்கடலில் எங்கோ
அவைகளை சேகரித்து வைத்தன...!
அவையெல்லாம் இப்போது
ஆழ்கடல் முத்தானது...!!
----அனீஷ் ஜெ...
 
 
 Send Your Comments on Whatsapp. Click Here
 Send Your Comments on Whatsapp. Click Here
 
 
 
 
 
ஆஹா அருமையான கவிதை கவிக்கா, மிகவும் ரசிச்சேன்... இப்போதான் புரிந்து கொண்டேன் முத்து எப்படி உருவாகிறது என:).. இவ்ளோ நாளா இது தெரியாமல் தேடிட்டு இருந்தேன்..:).
ReplyDeleteWowww.... superbbb....
ReplyDeleteஆறத்தழுவிய வரிகள் ஏகாந்தம் சொல்லிச் சொல்கிறது..
ReplyDeleteKadalaruge nee irundhal
ReplyDeletesuper
ReplyDeleteLovely lines
ReplyDelete