25 Oct 2013

உதட்டுச்சாயம் !

உதட்டுச்சாயம் !


உன் உதடுகளில்
ஒட்டியிருந்த
உதட்டுச்சாயத்தை
என் உதடுகளால்
ஒப்பியெடுத்தேன் நான்...!

உனக்கே தெரியாமல்
உன் முகமெங்கும்
ஒட்டிக்கொண்டது...!!
வெட்கங்கள்...

----அனீஷ் ஜெ...

23 Oct 2013

காதலை என்ன செய்வது...?

காதலை என்ன செய்வது...?


எதிரில் நீ வந்தால்
எகிறிக்குதிக்கும்
என் இதயத்தை,
இட நெஞ்சில் - நான்
இரகசியமாய் மறைக்கிறேன்...!

துடிக்கும் இதயத்தை
மறைத்துவிட்டேன்...!
அதனுள் துடிக்கும்
காதலை என்ன செய்வது...?

----அனீஷ் ஜெ...

21 Oct 2013

19 Oct 2013

14 Oct 2013

சேர்ந்திருந்தால் சுகமே...

சேர்ந்திருந்தால் சுகமே...


நிசப்தங்களாலான - என்
நித்திரையை - உன்
கனவுகளால்
கலகலப்பாக்கினாய்...!

வெறுமையான - என்
வானத்தில்
வானவில்லின்
வன்ணம் சேர்த்தாய்...!

சருகுகள்
சலசலத்த - என்
சாலை பாதையில்
சட்டெனெ வந்து பூவிரித்தாய்...!

பேசத்தெரியாத - என்
பேனாவை
கவிதைகள் சொல்லி
கத்த வைத்தாய்...!

உன்னோடு சேர்ந்திருந்தால்
வலிகள் கூட வரமாகும்...!
சோகம் கூட சுகமாகும்...!!

----அனீஷ் ஜெ...





12 Sept 2013

காதல்... காமம்...

காதல்... காமம்...


உதடுகள் நான்கும் சேர,
உருவாகும் ஈர முத்தம்...!

விரல்கள் மொத்தமாய்,
விளையாடும் மவுன சத்தம்...!

தேகங்கள் கட்டிக்கொண்டு,
தொடர்கின்ற கட்டில் யுத்தம்...!

எல்லா காதல்களின்
இதய கதவுகளுக்கு பின்னாலும்,
மறைந்திருந்துகொண்டு
கண் சிமிட்டி எட்டிப் பார்க்கிறது
காமம்...!

காரணம்...
காமம் இல்லாமல்
காதல் இல்லை...!
காமம் இல்லையென்றால் - அது
காதலே இல்லை...!!

----அனீஷ் ஜெ...

31 Aug 2013

நிலா நிலா...

நிலா நிலா...


தொலைதுர நிலவாய் நீ...!
தொட்டுவிட துடிக்கின்றேன் நான்...!!


எரிக்காமல் என்னை
அணைத்து விடு...!


சிரிப்பாலே சின்ன
வெளிச்சம் கொடு...!!

 
----அனீஷ் ஜெ...


31 Jul 2013

தூக்கத்தில் நீ...

தூக்கத்தில் நீ...


தூக்கத்திலிருக்கும் என்னை
தட்டியெழுப்பும்
உன் நினைவுகளை,
கட்டியணைத்துக்கொண்டு
தூங்க முயல்கிறேன் நான்...!

கட்டியணைத்த என்னை
கண் மூட விடாமல்,
காதல் சொல்லி
கூடல் கொள்கிறது...!
உன் நினைவுகள்...

----அனீஷ் ஜெ...

3 Jun 2013

முத்தம் எனும் வித்தை !

முத்தம் எனும் வித்தை !


இதழோடு பேசிக்கொண்டே - என்
விரல் நுனியை - உன்
இதழ் நுனியால்
ஈரம் செய்கிறாய்...!

நிலவை காட்டி
நீ எனக்கு இதழூட்டும்
நிலாப்பொழுதுகளை
நினைவூட்டுகின்றன
தென்றல் ஸ்பரிசங்கள்...!

உன் உதட்டுமெத்தையில்
படுத்துறங்க
காத்துக்கிடக்கின்றன - என்
கன்னங்கள்...

உன் இதழோடு
வழிந்தோடும் வெட்கங்களை
நான் தினந்தோறும் - என்
இதழோடு சேமிக்கிறேன்...!

என் கோபங்களை - உன்
எச்சிலால் கரைக்கலாமென
எப்படி தெரியும் உனக்கு...!

நம்
உதடுகள் நான்கும்
உறக்கமில்லாமல்
யுத்தம் செய்யட்டும்...!
முத்தம் எனும் வித்தையால்...

----அனீஷ் ஜெ...

11 May 2013

விரல்களும்... விரல்களும்...

விரல்களும்... விரல்களும்...


குடையின்
கைப்பிடியில்
சத்தமில்லாமல்
உரசிக்கொள்கிறது...!
நம் கைவிரல்கள்...

என் விரல்களோ
உன் விரல்கள் மேல்
இரகசியமாய்
இடப்பெயர்ச்சி செய்கிறது...!

கடும் குளிரிலும் - உன்
கை விரல்கள் மேல்
மின்னலின் வெப்பம்...!

நெளியும் - உன்
விரல்களில் கூட
வழிந்தோடுகிறது
வெட்கங்கள்...

இறுக்கி பிடித்ததும்
அடங்கிப்போன
உன் விரலசைவில்
கிறங்கிப்போகிறது மனது...!

எனக்கே தெரியாமல்
உனக்குள் மூழ்குகிறேன் நான்...!

இந்த மழை மட்டும்
நிற்காமல்
நீடிக்க வேண்டும்...!
உன் காதலில் - நான் 

மூழ்கி முடியும் வரை...

----அனீஷ் ஜெ...