9 May 2011

மழைக்காதல் !


வானம் கறுத்துக்கொண்டிருந்த
அந்த தருணம்...!

ஒரு மின்னல் போல்
என் முன்னே தோன்றினாய் நீ...

மழைக்காலத்தில் - அந்த
மாலை நேரத்தில் பூத்த,
வானவில்லை போல
அவ்வளவு அழகு நீ...!

உன் பார்வை மேகம்
என்னை மோதியதில்
என் மனசுக்குள் இப்பொழுது
அடைமழை...!

மண்ணிலே குதித்தாடும்
மழைத்துள்ளிகளை போல
ஆனந்தமாய் குதிக்கிறது...!
என் மனசு...

மழைக்கால மண் பிரசவிக்கும்
காளான்களை போல,
உன் முகமோ - மெலிதான
வெட்கத்தை பிரசவித்தது...!
நான் உன் அருகில் வந்தபோது...

ஒற்றை குடையில்
ஒரே பயணம்...

குடையே இல்லாமல்
மழையில் நனைவதுபோல்
சுகமாயிருந்தது...!
உன் குறும்பு பேச்சு...

என் கைவிரல்கள்
உன் கன்னம் தொட,
கன்னக்குழியில் நான்
நீர்துளியை போல்
சிக்கித் தவிப்பதுபோல் உணர்வு...!

உன் ஈரடி இதழ் கண்டு
என் ஆறடி தேகமும்
அமிலமாய் உருகிப் பாய,
அந்த இதழ்கள் இரண்டும்
இன்றிரவே - எனக்கு
இரவுணவு ஆகியிருக்கலாம்...!

மின்னலுக்கும் இடிக்குமான
இடையில் வரும் - அந்த
ஒற்றை நொடியை போல்
சிலிர்ப்பாய் உணர்கிறேன்...!
உன்னோடு நான் செலவிடும்
ஒவ்வொரு நொடியையும்...

மனசுக்குள் இன்பம் கொட்டும்
இதயத்தில் ஈரம் சொட்டும்,
உன் காதல் மழையில்
நான் முழுதாய் நனைகிறேன்...!

இரு குடை விரித்து - நாம்
விடை பெறும் முன்
உன்னிடம்
ஒன்றே ஒன்று கேட்கிறேன்...!

மேகம் கரைந்து தீர்ந்தாலும்,
பூமி ஒழுகி பாய்ந்தாலும்,
மழை மட்டும்
நின்றுவிடக் கூடாது...!
என்னை நனைத்துக்கொண்டிருக்கும்
உன் காதல் மழை மட்டும்...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

12 comments:

  1. @minu: ரொம்ப நன்றி...!!!

    ReplyDelete
  2. anishka nathanMay 10, 2011 2:05 pm

    hmmmmmm....:)))eppavum enna mazhai peyudu kondu irukirda kavingar avargale?

    ReplyDelete
  3. ம்ம்ம்.... என்னா கற்பனை... என்னா கற்பனை:))).... கவிதை கலக்கல்.... ஆனா கற்பனை கொஞ்சம் ஓவர்தான்..:)))

    ReplyDelete
  4. @monika: ரொம்ப நன்றி...!!

    ReplyDelete
  5. @anishka nathan: இங்கே ஒரே வெயிலா இருக்கு...! அதான் நானே அடிக்கடி கவிதையில் மழை பெய்ய வைக்கிறேன்...!! அதுசரி யாரு இந்த “கவிஞர் அவர்களே” ? ;)

    கருத்துக்கு ரொம்ப நன்றி...!

    ReplyDelete
  6. @athira: ஓவர்தான்... என்ன பண்றது... அதுவா வருது...! :)
    கருத்துக்கு நன்றி...!!

    ReplyDelete
  7. Romba nalla irukku Anish...
    Unga kaatula eppavumey Mazhai peiya vaazhthukal...
    Kalakureenga...!
    :) :C :)

    ReplyDelete
  8. @Kaavya: வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி...! :)

    ReplyDelete
  9. anish ungal kavithaigal miga miga nanraga uladu

    ReplyDelete
  10. @venkatesh: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி....! :) மீண்டும் வருக...! :)

    ReplyDelete