
நீ தந்த கடிதங்களை
நிலவொளியில் இருந்து
விடியும்வரை
படித்துப்பார்க்கிறேன்...!
கொட்டும் அருவியின்
அருகில் அமர்ந்து,
நீ சிரிப்பதாய் நினைத்து
நானும் சிரித்துக்கொள்கிறேன்...!
உயிருள்ளவரை - என்
உயிர்துடிப்பு நீ என
கவிதை எழுதியே
காலந்தள்ளுகிறேன்...!
வருடந்தோறும் வந்துபோகும்
காதலர் தினத்தில்,
நீ தந்துபோன பரிசுகளை
தினம் தினம்
விரல்களால் உரசிப்பார்க்கிறேன்...!
நம் காலடிப்பட்டு
கடற்கரை மணல் கருத்தரித்த
காலடிச்சுவடுகளை
தேடிப்போகிறேன்...!
இருவரும் இணைந்துநின்று,
இதழ்களால் புன்னைகைத்து,
புகைப்படமாய் என்
பழைய புத்தகத்திலிருக்கும்
நம்மை உற்றுநோக்குகிறேன்...!
என்னில் நீ
இதழ்பதித்த இடங்களின்
ஈரங்களை தேடிப்பார்க்கிறேன்...!
பெண்ணே...!
இனியென்ன நான் செய்ய...?
இன்னொருவனுக்கு நீ
மனைவியான பின்பு...
----அனீஷ் ஜெ...
Send Your Comments on Whatsapp. Click Here
திசைமாறிய காதலை அழகான வரிகளில் சோகரசம் ததும்ப கவிவடித்தது அற்புதம்
ReplyDeleteஇனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள் நண்பரே...
ReplyDeleteno feeling anishj,,
ReplyDeleteenna neenga go to next one,,,
all the best anish
@அம்பலத்தார்: ஹ்ம்ம்ம்... வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி ! :)
ReplyDelete@ரெவெரி: உங்களுக்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள் நண்பரே...! :)
ReplyDelete@Anonymous: ஹாஹா இப்படிலாம் அட்வைஸ் பண்ணபிடாது... ;) ;)
ReplyDeleteஹ்ம்ம்ம்... வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி ! :)
Super anish Arputhama varigal.. :L
ReplyDelete@kilora: ஆ ரொம்ப நன்றி !!
ReplyDeleteellame ninavugal dan enna seyya?
ReplyDelete@anishka nathan: ஒண்ணும் பண்ண முடியாது !
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி...
மனைவி என்பவள் கற்பகமரம்..அது அரிது..காதலி என்பவள் கற்பூரம்... கரையாது..
ReplyDeleteபார்த்திபன்