இன்று ஒன்று 11/11/11
உன்
ஒற்றை சிரிப்பில்
ஓராயிரம் முறை
செத்துப்பிழைக்கிறது...!
என் ஒற்றை இதயம்...
ஒருகோடி பூக்களை
ஒன்றாய் தூவும் - உன்
இதழ் புன்னகையை - நான்
ஒன்றாய் சேர்த்து
என் நெஞ்சினோரம்
ஒரு மலர்வனமாய்
கோர்த்து வைக்கிறேன்...!
ஒற்றையடி பாதையில்
ஒரே குடையின் கீழ் - நாம்
ஒன்றாய் நனையும் போது நமக்குள்
ஒருகோடி சூரியனின் வெப்பம்...!
உன் ஒரு முத்தத்திற்காக
ஒருவருக்கும் தெரியாமல்
ஒருகோடி யுத்தம் செய்கிறது...!
என் ஒற்றை மனது...
ஒரு சின்ன கவிதை சொல்லி,
ஒரு கையால் உன் கன்னம் கிள்ளி,
ஒவ்வொரு நிமிடமும்
உனக்குள் நிறைகிறேன் நான்...!
ஓராயிரம் ஜென்மம்
நான் கொண்டாலும்,
உலகமே ஒருநாள்
உடைந்து துண்டானாலும்,
என் ஒற்றை உயிரும்
ஒரே காதலும் - எனது
ஒற்றை ஜீவன் உனக்கே...
----அனீஷ் ஜெ...
ஹாய் நண்பர்களே...! வித்தியாசமா எழுத முயற்சி பண்ணி, கவிதை செம மொக்கை ஆயிடிச்சு..! கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க... ;) ‘)
ReplyDeleteninga ezhudina mokka ahadu romba nala eruku
ReplyDeleteஇந்த ஒன்றும் நன்றே ... வாழ்த்துக்கள் தல ...
ReplyDelete@anishka nathan: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!
ReplyDelete@அரசன்: வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி தல...!
ReplyDeleteanish yellowish add pannama irunthidukkalam ..athu minus aa maari kavithai azhagai kedukkuthu nnu ninaikkiren ....
ReplyDeletekavithai asusual superb.... good
@kalai: ஹ்ம்ம்... இன்றைய தினத்துக்கும், தலைப்புக்கும், கவிதைக்கும் குட்டியா எதோ ஒரு தொடர்பு இருக்குனு படிக்குறவங்களுக்கு புரியட்டுமேனுதான் மஞ்சள் நிறந்தில் அந்த வார்த்தைகளை மாற்றினேன்...! :Y:Y ஆனா நீங்க சொல்ற மாதிரி அது தேவை இல்லாததுனு இப்போ தோணுது...! ஹ்ம்ம்ம் போட்டது போட்டதாகவே இருக்கட்டும்...! அடுத்த கவிதையிலிருந்து இது போன்ற தவறுகளை திருத்த முயற்சிக்கிறேன்...! :)
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு மிக்க நன்றி கலை...! :)
ஒற்றையாய் இருந்து
ReplyDeleteஒரு கவிதை எழுதி
ஒவ்வொரு முறையும்
ஒரே ஒரு காதலிக்கு
அனுப்பிக்கொண்டிருக்கும்
ஒரு கவிக்காவுக்கு
ஒரு வாழ்த்து:)).
கவிதை அங்கங்கு கொயப்பினாலும் மொத்தத்தில் அழகு. அதிலும் மஞ்சள் மூலம் காட்டியதால்தான் கண்டுபிடித்தேன் கிக்..கிக்..கீஈஈஈஈ:K
ReplyDeleteசிரிப்பதைப் பார்த்துச் செத்த, ஒரே ஒரு ஆள் நம்மட கவிக்காதவிர வேறாரும் இருக்கவே முடியாது ஹையோ ஹையோ:)))..:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R:R
ReplyDeleteஒற்றையாய் நின்று...ஒரு தலைக் காதல் சொல்லும் இந்த ஒரு கவிதை மட்டும் தான் நினைவிருக்குமோ
ReplyDeleteஇந்த ஒற்றை நாளை இன்னொரு நாள் நினைத்தால்..
@athira: // ஒவ்வொரு முறையும் ஒரே ஒரு காதலிக்கு அனுப்பிக்கொண்டிருக்கும் //
ReplyDeleteஅதுதுதுதுது... உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...! =))=))
//கவிதை அங்கங்கு கொயப்பினாலும் மொத்தத்தில் அழகு//
அப்படியா? ஆனா நான் படிக்கும்போது மொத்ததிதில் கூட கொழப்பமாதான் இருக்கு.. ;);)
//அதிலும் மஞ்சள் மூலம் காட்டியதால்தான் கண்டுபிடித்தேன்//
அட அப்படியா இந்த கவிதை நான் போட்ட நாள் மட்டும் 11/11/11 அல்ல.... நேரம் கூட இந்திய நேரப்படி காலை 11 மணி 11 நிமிடங்கள் ;)
//சிரிப்பதைப் பார்த்துச் செத்த, ஒரே ஒரு ஆள் நம்மட கவிக்காதவிர வேறாரும் இருக்கவே முடியாது//
ஐயோகோ அது சிரிப்பை பார்த்து சாகுறது இல்ல... செத்துப்பிழைக்கிறது...! :D
வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க... :):)
@ரெவெரி: வாங்க நண்பரே... :)
ReplyDeleteரொம்ப நன்றி உங்கள் அழகான கருத்துக்கு... ;)
நல்லா இருக்கு என்னமோ மிஸ் ஆகுதுங்க anish.. ஏதோ மிஸ் ஆகுது.. என்னனு சொல்ல தெரியல.. அனா மிஸ் ஆகுது.. எப்போதும் படிகிரபோ சம்திங் இருக்கும் ஆன இது அப்படி இல்ல..
ReplyDelete@kilora: மிஸ் ஆகுதா? ஒருவேளை உப்பு கம்மியா இருக்குமோ? or காரம்?? hmmm சும்மா தமாசுசுசுசுசு :D அதான் முதல்லேயே சொல்லிட்டேனே மொக்கையாதான் இருக்கும்னு.. ;) சரி சரி free ah விடுங்க...
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...