5 Nov 2011

கனத்த மனதும்... கண்ணீர் துளியும்...


நீ என் பெயர் சொல்லி
அழைப்பதுபோல் ஒரு உணர்வு...!
பாதி தூக்கத்திலும்
பதறியடித்து எழுகிறேன்...!

காலையில் கண்விழித்ததும்
நெஞ்சோரம் ஒட்டிக்கொள்ளும்
உன் நினைவு துளிகள்
கசக்கி பிழிகின்றன...!
என் உயிரை...

நம் காதல் கணங்களும்,
நம் கைகோர்த்த பயணங்களும்,
அழியாத சுவடுகளாய்
அடிநெஞ்சில் பதிந்துகிடக்கின்றன...!

கங்கையாய் ஊற்றெடுக்கும்
கண்ணீர்துளிகள் - என்
கன்னம் தொடும்போது - நான்
கனத்த மனதோடு நினைத்துக்கொள்கிறேன்...!

நாம் சந்திக்காமலே இருந்திருக்கலாம்...!
என் கண்ணீர்துளிகளாவது
மிஞ்சியிருக்கும்...!!

----அனீஷ் ஜெ...

SHARE THIS

12 comments:

  1. அருமை அருமை
    உணர்வுகளின் சுமை தாங்காது
    வார்த்தைகள் தடுமாறும் அற்புதக் கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. பல காதல்கள் காவியமாக மாறும் வரம் பெற்றுள்ளன ..
    அதில் உங்களதும் இணைந்திருக்கும் போல ..

    ஆனால் வலி மட்டும் உயிரை பிழியும் ... உணர்ந்தவன் என்ற முறையில்
    கூறுகிறேன் ..

    வரிகளில் கவிநயம் அழகாய் குடி கொண்டு இனிமை சேர்க்கிறது ..
    படைப்புக்கு வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  3. @Ramani: வருகைக்கும், வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி ஐயா...! :)

    ReplyDelete
  4. @அரசன்: உண்மைதான் தல...! ஆனால் எல்லா வலிகளுக்கும் மருந்தும் இருக்கிறது என்பதையும் மறந்துவிட கூடாது...! :)
    வருகைக்கும், வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி தல.. :)

    ReplyDelete
  5. nallaa irukku anishj...

    kalkkunga..

    vaazththukkal .....;

    ReplyDelete
  6. சத்தியமா மனச கொன்னுடிங்க .. ஒவ்வொரு தடவையும் உங்க kavithai படிக்கும் poluthum பிடிச்சு இருக்கும் ஆனா இந்த கவிதை ரொம்ப ரொம்ப பாதிச்சிடுச்சி.. வாழ்கையில் நடக்கற விஷயம் அப்படியே எழுதி இருக்கீங்க.. ..fantastic lines.. super.. super.. super.. வலிகள் ஏற்படும் பொழுது வார்த்தைகள் உதவாது.. கண்கள் மட்டும் பேசும்.. சூப்பர்..

    ReplyDelete
  7. பிடித்தது நண்பரே...நல்லா வந்திருக்கு...

    ReplyDelete
  8. @Anonymous: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி !!

    ReplyDelete
  9. @kilora: இன்னாது மனசை கொன்னுட்டேனா? ஏங்க ஏன் அப்பாவி பையன்மேல இப்படி கொலை பழி சுமத்துறீங்க... ;);)
    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க...

    ReplyDelete
  10. @ரெவெரி: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!!

    ReplyDelete
  11. hmmmmmmm??

    ReplyDelete
  12. @anishka nathan: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete