25 Nov 2011

காதல் எதிரி !


கல்லூரியில்தான்
இவர்களின் காதல்
ஆரம்பமாயிருக்கலாம்...!

இரவு முழுவதும்
இவள் அவனுடன்
செல்போன் வழியே
காதல் வளர்த்திருக்கலாம்...!

சினிமா...!
சிலசமயம் கடற்கரை..!!
இங்கெல்லாம் இவர்கள்
ரகசியமாய்
சுற்றி திரிந்திருக்கலாம்...!

காதல் சத்தியங்கள்...!
திருமண வாக்குறுதிகள் என
இவர்களில் காதல்
இன்னும் வலிமையாகியிருக்கலாம்...!!

அன்று...
சமையலறையில்
சமைத்துக்கொண்டிருந்த
அம்மாவிடம்
அவள் சத்தமில்லாமல் சொன்னாள்...!
அம்மா நான் ஒருவனை
காதலிக்கிறேன் என்று...

அன்று மாலை...
காதலனோ
காதலியுடன் சேர நடத்தும்,
கடைசிகட்ட போராட்டத்தை
தொலைக்காட்சி சினிமாவில்
கவலையோடு
பார்த்துக்கொண்டிருந்த என்னிடம் - என்
காதல் மனைவி சோகத்துடன் சொன்னாள்...!
உங்க பொண்ணு
யாரையோ காதலிக்கிறாளாம் என...

அடுத்த நொடியே
கோபத்துடன் கத்தினேன் நான்...

என்றோ ஒருநாள்
என் காதல் மனைவியை
கைப்பிடிக்க
காதலை புனிதம் என்றவன்,
இப்பொழுது
இந்த கோப நொடிகளில்,
என் மகளின் காதல் உடைக்கும்
காதல் எதிரியாய்
மாறிக்கொண்டிருந்தேன்...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

19 comments:

 1. சரியாகச் சொன்னீங்க... அந்தந்த வயதிலதான் அது அது பெரிதாகத் தெரியும்.... நான் “அதை”ச் சொன்னேன்:R:R:R:R

  ReplyDelete
 2. அவர் சராசரி ரகம் போல..முரண் கவிதை நல்லாயிருந்தது அனீஸ்...வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. கவிதை நல்லாத்தான் இருக்கு, இருப்பினும் வழமையான விறுவிறுப்பைக் காண முடியவில்லை இதில்:T

  ReplyDelete
 4. @athira: //சரியாகச் சொன்னீங்க... அந்தந்த வயதிலதான் அது அது பெரிதாகத் தெரியும்.... நான் “அதை”ச் சொன்னேன்:R:R:R:R//
  ஓஓ “அதை”தான் சொன்னீங்களா?... நான் வேற எதையோ சொல்றீங்கனு நினைச்சேன்...:T:T

  //கவிதை நல்லாத்தான் இருக்கு, இருப்பினும் வழமையான விறுவிறுப்பைக் காண முடியவில்லை இதில்:T//
  ஹாஹா அடுத்த கவிதையிலிருந்து, கவிதைக்கு இடையில் நாலு பைட்டு,இரண்டு பாடல், கொஞ்சம் “பஞ்ச்” டயலாக் இதுலாம் சேத்துக்குறேன்...!
  சும்மா தமாசு... :D
  இனிமே விறுவிறுப்பா எழுத முயற்சிக்கிறேன்...! :)

  ஃபஸ்டு வந்தமைக்கும், எழுதையமைக்கும் நன்றி...! :)

  ReplyDelete
 5. @ரெவெரி: கிட்டத்தட்ட எல்லா மாமாக்களும்... ஐ மீன் பொண்ணோட அப்பாக்களும் இப்படிதான் இருக்காங்க... :R:R:R:R:R

  வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா..! :)

  ReplyDelete
 6. anish enna ithu ungalukku oru niyayam ,,unga malukku oru niyayamaa ,,,,,

  anish something is missing paa...

  ReplyDelete
 7. @kalai: எல்லா பொண்ணுங்களோட அப்பாக்களும் இப்படிதான் இருக்காங்க...! அதைதான் சொல்ல try பண்ணிருக்கேன்....!

  ஆ.. என்னாது மிஸ்ஸிங்கா..? ஒருவேளை உப்பா இருக்குமோ..? :Y
  சும்மா தமாசுசுசுசுசு :D:D

  இனிமேல் எதுவும் மிஸ் ஆகாம எழுத முயற்சி பண்றேன்...! :)

  வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

  ReplyDelete
 8. என்னங்க இப்படி தமிழ்சினிமா வில்லன் ரேஞ்சில்

  ReplyDelete
 9. மனித மனங்களின் முரண்களை அழகுபடக் கூறியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 10. @அம்பலத்தார்://என்னங்க இப்படி தமிழ்சினிமா வில்லன் ரேஞ்சில்//
  சினிமாவில் மட்டுமல்ல... நிஜத்தில் கூட சில ஃபிகருங்களோட அப்பனுங்க எல்லாம் இப்படிதானே இருக்காங்கே... ;)

  வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

  ReplyDelete
 11. ஹா..ஹா..ஹா... விறுவிறுப்பெல்லாம் வாணாம்.... ரொம்ப அமைதியா இருந்து எழுதுங்க கவிக்கா...:R:R:R:R:R:R:R:R:R:R:R:R

  ReplyDelete
 12. அடி பட்டவனுக்கு தான் வலி தெரியும் என்பார்கள் ..
  இங்கு அப்படி இல்லையே தல ...
  ஒருவேளை காதலினால் அவன் பட்ட துன்பத்தை
  வேறு ஒருவன் படக் கூடாது என்ற நல்ல எண்ணத்திலா அப்படி சொல்கிறார் ..

  கவிதை கலக்கலா இருக்கு .. கொஞ்சம் வித்தியாசமான சொல்லாடல் கண்டு வியந்தேன் ..
  தொடரட்டும் ... கவிப்பயணம் ..

  ReplyDelete
 13. @athira: ”அமைதியா” இருக்குறதா...????? அது ரொம்ப கஷ்டமாச்சே... :R:R

  நன்றி ! :)

  ReplyDelete
 14. @அரசன்: எனக்கு தெரிந்தவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட பெற்றோர் கூட தன் மகன்/மகள் காதலை எதிர்க்கின்றனர்...! அதைதான் சொல்லிருக்கேன்...! :)

  வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

  ReplyDelete
 15. unmaiyana varigal .. ella parentsum ippadi than irukanga.. cheri unga parents eppadi.. ok solliduvangala illa ithu pola thana.. heading super but varigalla ennamo miss aguthu.. ennanu solla theriyala.. cheri ponnu pathu vachitingala unga parents kitta solla..

  ReplyDelete
 16. ada eppadium kavithai eluthalama..ethu nalla erukey..:)

  ReplyDelete
 17. @kilora: அட பொண்ணுலாம் பார்த்திட்டேன்...! parents கிட்ட சொல்றதுக்கு முன்னாடி அந்த பொண்ணுகிட்ட சொல்லோணும்ங்க..! :R:R
  வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

  ReplyDelete
 18. @siva: இப்படியும் எழுதாலாம்...! ஆனா இது கவிதையானு நீங்கதான் முடிவு செய்யணும் பாஸ்...! ;);)
  வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

  ReplyDelete