7 Nov 2011

உணர்ச்சிப்பிழை !


தவிர்க்க முடியாத உணர்ச்சிகள்...!
தடுமாறிப்போன நிதானம்...!!

பாதங்கள் பயணிக்க தொடங்கின...!
அவளின் வாசல் தேடி...

முதுகுப்பரப்பில் முத்தமிட்டு
உடலோடு உடல் உரசி
சூடேற்றிக்கொண்டேன் என்னை...!

எல்லை மீறியபோதும்
எதிர்க்கவில்லை அவள்...!
புரிந்துகொண்டேன் அவளை...!!
தொழிலுக்கு
துரோகம் செய்யாதவள் அவள்...

மோக மழை
மேகமாய் பெய்ய,
தாகம் தணித்தது...!
என் தேகம்...

காசுகொடுத்து
கை கழுவிவிட்டு
புறப்பட்டேன் அங்கிருந்து...!
என்னுடன் வந்தது
எய்ட்ஸ்...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

12 comments:

  1. UNARCHIPIZHAI...NALLA ELZHUTHI IRUKKINGA ........AARAMBITHA IRENDU VARIGALUM KADAISI IRENDU VARIGALUM UNMAIYAI ROMBA AZHAGA UNARUBADI SOLLI IRUKKINGA...GOOD......

    ReplyDelete
  2. வரிகள் சேர்த்து கோர்வையாய் ஒரு கொடுமையை கூறிய விதம் சிறப்பு ..
    இன்னும் கொஞ்சம் மேருகேற்றிருக்கலாம் என்று தோன்றுகிறது தல ..
    படம் கவி பேசுது,...
    மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அட இவ்வளவு இலகுவாக வாங்கலாமா

    ReplyDelete
  4. ஒரு நொடி உணாச்சி தவறு வாழ்கையே முடிவுக்கு கொண்டு செல்லும் என்பதை உண்மைய எப்படி அழகாக சொல்லி இருக்கீங்க.. சூப்பர்.. :Q :Q

    ReplyDelete
  5. அட!
    அசத்தல்!
    உணர்ச்சியிபிழையால்
    வரும் விபரீதத்தை
    வார்த்தையால்
    வடித்திருக்கிறீர்கள்
    அழகு!

    ReplyDelete
  6. @kalai: ஹ்ம்ம்ம்... வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  7. @அரசன்: இது நான் college first year படிக்கும் போது எழுதிய கவிதை...! இங்கே போடலாமா வேணாமானு ரொம்ப நாள் யோசிச்சு இப்போ போட்டிருக்கேன்...! இங்கே போடுவதற்காக இந்த கவிதையில் நான் வெறும் நான்கு வரிகளை மட்டும் இப்பொழுது மாற்றம் செய்துள்ளேன்...! அடுத்த கவிதையிலிருந்து இன்னும் சிறப்பாக எழுத முயற்சிக்கிறேன் தல...! :)
    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  8. @அம்பலத்தார்: அது கொடுக்குறவங்களை பொருத்ததுனு நினைக்கிறேன் நண்பரே... ;)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...!

    ReplyDelete
  9. @kilora: வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி...! :)

    ReplyDelete
  10. @கோகுல்: வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே...!

    ReplyDelete
  11. @anishka nathan: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete