என் சிறுவயது முதலே
நான் கேட்கத்தொடங்கிய
அந்த எதிர்வீட்டு குரல்...!
ஒரே பள்ளிக்கூடம்..!!
எதிரெதிர் வீடு...!!
என் தங்கையின் தோழி...!
அத்தனையும் இருந்தும்,
அந்த சிறு வயதில்
அந்த குரலுக்கு சொந்தக்காரி
என்னிடம் பேசியதே இல்லை...!
அவள் என்னிடம்
பேசவே பயப்பட்டிருக்கலாம்...!
வருடங்கள் பல தாண்டின...!
எதிர்வீட்டிலிருந்து
எப்போதும் கேட்கும்
அந்த குரல்
அடிக்கடி காணாமல்போய்கொண்டிருந்தது...!
தங்கையிடம் கேட்டபோது,
அவள் கல்லூரி போவதாகவும்,
விடுதியில் தங்கி விட்டு
விடுமுறை நாட்களில் மட்டும்
வீடு வருவாதாகவும் சொன்னாள்...!
காதுகளை சுற்றிவரும்
துருதுருவென்ற அந்த குரலை
கேட்க வேண்டும் போலிருந்தது...!
அன்றொருநாள்...
அவள் விடுமுறைக்கு
வீடு வந்திருந்தாள்...!
சட்டென
என் முன்னே வந்த அவள்
என் பெயரை அழைத்து
எப்படியிருக்கிறாய் என கேட்டாள்...!
இத்தனை ஆண்டுகளில்
இதுவரை அவள்
இப்படி என்னிடம் கேட்டதில்லை...!
அன்று என்னிடம்
அவள் நிறையவே பேசினாள்...!
இப்பொழுதெல்லாம்
விடுமுறைக்கு வரும்போது
நீண்ட நேரம் என்னிடம் பேசுகிறாள்...!
சில சமயங்கள் - என்
விரல் கோர்த்தபடி
வீதியில் நடக்கிறாள்...!
மனதிற்குள் மகிழ்ச்சி...!
தட்டுத்தடுமாறி விழுந்த
தடுமாற்றத்தின் வலிகள்...!
அம்மா அப்பா முதல்
அத்தனை பேரையும்
இருட்டோவியமாய்
உயிருக்குள் வரைந்த
உணர்வின் வலிகள்...!!
இந்த வலிகள் அனைத்தையும்
தாங்க பழகிக்கொண்ட என் மனது,
இப்பொழுது முதன்முதலாய்
இவள் முகம் காண ஏங்குகிறது...!
என் மனதிற்கு
எப்படி நான் புரியவைப்பது...?
குருட்டு மனிதன் எனக்கு
இவள் முகமும்
இருட்டாய்தான் தெரியும் என்பதை...
----அனீஷ் ஜெ...
ம்ம்..அருமை...கடைசி ஐந்து வரிகள்...ரசித்தேன்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
அருமை அருமை
ReplyDeleteஇறுதி வரிகள் மனம் கனக்கச் செய்து போகிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
அழகான காதல் வரிகள்.
ReplyDeleteதொடக்க வரிகள் பட்டாசாய் வெடிச்சி சிதறுது ...
ReplyDeleteஇறுதியில் இதயத்தை கூறு போடுவதாய் வலிக்க வைக்கின்றது ....
தரமான படைப்புக்கு வாழ்த்துகிறேன் தல ....
wow ,,,,,, superb anish....
ReplyDeletereally unmai laa ....
kannu thaeriyathavangaloda sharing of love and feelings romba azhaga irukkum ...oruvar kai korththu innorththanga thol pidichchi kuchchi vaiththuttu nadakkum bothu avanga love thaan enakku amazing yaa irukkum ,,,
very good anish .......
ஏதும் குறை கண்டு பிடிச்சு ஊதிப் பெருசாக்கிட்டு ஓடிடலாம் எனத் தேடினேன்.... ம்ஹூம்.... கவிதை முடிவு மனதை டச்... இது வேற டச்:) பண்ணிட்டுது அவ்வ்வ்வ்வ்வ்:))).
ReplyDeleteநீங்க எப்பவுமே வித்தியாசமாகச் சிந்திக்கிக்கிறீங்க கவிக்கா.... இதுக்கெல்லாம் காரணம் கவிக்கா இல்லை.... அந்த தையல்போட்ட இதயம் தான்:R:R:R:R:R:R:R.
ReplyDeleteஅதுசரி எப்பவுமே பெண்ண்ண்ண்ண் பற்றிய நினைப்புத்தானோ? பூஸ்... பப்பி இவைபற்றியும் கவிதை எழுதலாமெல்லோ:T:T:T:T
@ரெவெரி: hmmm வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே...! :)
ReplyDelete@Ramani: வாங்க ஐயா...!
ReplyDeleteஉங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)
@kavitha: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி :)
ReplyDelete@அரசன்: hmmm...
ReplyDeleteவருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி தல...! :)
@kalai: ஆமாம் கலை...! இரு கண்ணை மூடிக்கொண்டு அந்த இருட்டில் நம்மால் ஒரு நிமிடம் கூட(தூங்கும் நேரம் தவிர) வாழ முடியாதபோது, ஒரு ஜென்மம் முழுவதும் அந்த இருட்டிலே வாழும் பார்வையற்றோர் ஆச்சரியமான தன்னம்பிக்கை மனிதர்கள்...!
ReplyDeleteஉங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி :)
@athira: //ஏதும் குறை கண்டு பிடிச்சு ஊதிப் பெருசாக்கிட்டு ஓடிடலாம் எனத் தேடினேன்.... ம்ஹூம்.... //
ReplyDeleteஹாஹா நீங்க குறை கண்டுபிடித்து சொன்னால் நான் ரொம்ப சந்தோஷமாவேன்...! குறைகளை உடனே சொல்லும் நண்பர்களால் தான் என்னுடைய கவிதைகள் முன்பை விட இப்பொழுது சற்று மேம்பட்டு இருக்கிறது என நினைக்கிறேன்...!
//நீங்க எப்பவுமே வித்தியாசமாகச் சிந்திக்கிக்கிறீங்க கவிக்கா....//
முன்பே ஒரு கமெண்டில் சொல்லியிருக்கிறேன்...! நான் எழுதும் கவிதைகள் மொக்கையா இருந்தா கூட பரவாயில்லை...! ஆனால் வித்தியாசமா இருக்க வேண்டும் என நினைக்கிறேன்..! அதுக்காக தான் கொஞ்சம் வித்தியாசமா சிந்திக்குறேன்..! :p
//இதுக்கெல்லாம் காரணம் கவிக்கா இல்லை.... அந்த தையல்போட்ட இதயம் தான்:R:R:R:R:R:R:R. //
தையல் போடுறதுக்கு முன்னாடி கூட இப்படிதான் இருந்தேன்... ;);) ஆனா அப்போ கொஞ்சம்.... (இதுக்கு மேல சொல்ல முடியாது) :R:R
//அதுசரி எப்பவுமே பெண்ண்ண்ண்ண் பற்றிய நினைப்புத்தானோ?//
பெண்களுக்கு இடஒதுக்கீடு இல்லை, எதுலயும் முக்கியத்துவம் கொடுக்கல அப்படி இப்படினு இங்க ஏராளமான பிரச்சனைகள்...! அதனாலதான் நான் என் கவிதையில் பெண்களுக்கு முக்கியத்துவம் & 70% இட ஒதுக்கீடு கொடுக்கிறேன்...! :R:R:R:R:R
//பூஸ்... பப்பி இவைபற்றியும் கவிதை எழுதலாமெல்லோ:T:T:T:T//
பெண் பப்பி, பூஸ் பற்றிய?? R:R:R:R:R ஹாஹா சும்மா தமாசு... :)
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி :)
நல்லா இருக்கு
ReplyDeleteதமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
@தமிழ்தோட்டம்: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!
ReplyDeletehello anish.. pathute iruka nenaicha eppa than kalyana sappadu poda poringa.. poi solli sirikiram mudivedunga.. pavam antha ponnuyum la kakka vekuringa..lovely and superb lines.. superb..:)) :)) :)) :)) :)) :)) :)) :))
ReplyDelete@kilora: ufffffffff... உங்களுக்கு கவிதை சரியா புரியலைனு நினைக்கிறேன்...! :Y:Y
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!
yes anish super super.. blind person avanga correcta .. fantastic ippa than purinchinthu.. yar mugathaiyum parka engatha manathu ivanga mugatha parka enga vaivathathu.. super super.. last three paragraph arumaiyana varigal..
ReplyDelete@kilora: இப்போவாவது புரிஞ்சுதுனா ரொம்ப சந்தோசம்...! :D
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!
:((......dont write such poems ani
ReplyDelete@anishka nathan: ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்????????????????????
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!!!