15 Dec 2011

வழித்துணையாய்...


அழுகையிலே இது
ஆரம்பிக்கும்...!
அழுகையோடு இதன்
ஆட்டமும் நிற்கும்...!!

தொலைக்காமலே ஒரு
தேடல் நடக்கும்...!
தொடும்தூரமும் சிலசமயம்
தொலைவில் கிடக்கும்...!!

தோல்விகளில்
தோளும் கிடைக்கும்...!
சிலசமயம் சில கால்கள்
எட்டி உதைக்கும்...!

கனவுகள் சிலநேரம்
நிஜமாக மாறும்...!
நிஜங்களும் பலநேரம்
நினைவாகி போகும்...!!

இழப்புகளும்,
இமைபொழியும் கண்ணீரும்
இங்கு ஏராளம்...!
பிழைகளும்,
பிழைப்புக்கான மோதல்களும்
இங்கு தாராளம்...!!

அடுத்தவனின் அழுகையில் பலர்
ஆரவாரமாய் சிரிக்கலாம்...!
சிரிப்பை கண்டாலோ
சிலர் கண்ணீரும் சிந்தலாம்...!!

அடுத்தது என்ன இதில்
அறிய முடியவில்லை...!
கடந்து போனதை மறுமுறை
காண வழியுமில்லை...!

முரண்பாடுகளை 

முதுகில் சுமந்துகொண்டு,
முழுநீள வழித்துணையாய்,
நம்மோடு பயணிக்கிறது...!
நமது வாழ்க்கை...

----அனீஷ் ஜெ...


SHARE THIS

20 comments:

  1. hmmm life is a deep experience we can learn many things and shld take that possitively,,,,,,vazhkai veruka kudadu ada anubivikanam

    ReplyDelete
  2. en kannu la kannir vazhiyadu ani it touched my heart v good poem

    ReplyDelete
  3. @anishka nathan: நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்... ;)

    ஹ்ம்ம்ம் இதுக்கெல்லாம் அழகூடாது... :T:T

    100 comments-க்கு நன்றிகள் & வாழ்த்துகள்...! :)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)

    ReplyDelete
  4. hey superb,,.,,,,,,,,,really very very very superb...............

    anish thaththaa thaththuva mazhai pozhiyuraangaooo.............

    ReplyDelete
  5. ம்ம்ம்ம்ம்... மிக அழகா இருக்கு.:H,நான் கவிதையை மட்டும் சொன்னேன்:R

    ReplyDelete
  6. நடந்தவை யாவும் நடந்தவைதானே? போனவை எவையும் திரும்பி வரப்போவதில்லை.. அதனால இருப்பதை மகிழ்வாக அனுபவிப்போமே...

    எனக்கு இந்த பின்னூட்ட பக்கிரவுண்ட் பிடிக்கவே பிடிக்கல்ல... இது வேற பிடிப்பு:R:R:R:R

    ReplyDelete
  7. @kalai: இது தத்துவமழைக்காலம்...!

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  8. @athira: நீங்களும் தத்துவம் தத்துவமா சொல்றீங்களே...? :Y:Y

    ஆ.. முன்னாடியே சொன்னீங்க இல்ல.. ஹ்ம்ம்ம் வலைப்பூவின் நிறத்தையே, சீக்கிரம் மாற்ற முயற்சிக்கிறேன்...!

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  9. ஏன் கவிக்கா... வரவர மெமெறி பவரும்ம்ம்ம்ம் குறையுதோ? நான் ஞபக மறதிக்குச் சொன்னேன்...:A:A

    ReplyDelete
  10. @athira: :Q:Q வயசாகுதுல இனிமே அப்படிதான்... :R:R

    நன்றி... :)

    ReplyDelete
  11. வாழ்வின் பிடிமானங்கள் சில நெருங்கிய உறவுகளாலும் , அதிக நம்பிக்கையாலும் ...
    சில நல்ல கவிதையிலும் நம்பிக்கை பிறக்கும் ... அதை சுமந்த இந்த கவிதைக்கு
    அன்பு வாழ்த்துக்கள் ... வாழ்வின் பரிமாணங்களில் பல வண்ண மாறுதல்கள் , பல வண்ண வடுக்கள் என்பதை
    சுருக்கி கூறிய உங்கள் அழகிய வரிகளுக்கு என் நெஞ்சு நிறைந்த வாழ்த்துக்கள் வணக்கங்கள் தல ..

    ReplyDelete
  12. @அரசன்: வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி தல...! :)

    ReplyDelete
  13. unmaiyana varigal anish..unga kavithai pidithu kondu irukum poluthe kangal aluthu.. varthaiyil sola mudiyala valigal santhosangal niranthathu than valgai.. anal antha valigalil nenaivugal vadugalaka mari manathileye thangi sila visayalil nabagam vathudum.. valthugal anish.. ippadi nalla kavithaigalu hat's off anish..

    ReplyDelete
  14. wish you happy christmas.....christmas pandigai vazhtukal ani god bless you and your family

    ReplyDelete
  15. christmas decoration is v beautiful...wish your life may be lit with colourful events like bulbs god bless u ani

    ReplyDelete
  16. 1100 vimarsanam ku congratulations ani

    ReplyDelete
  17. @kilora: ஹ்ம்ம்ம்... வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  18. @anishka nathan: நன்றி... ! நன்றி...!

    உங்களுக்கும், உங்கள் குடுப்பத்தாருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்...! :)

    ReplyDelete
  19. haie super ..super ....super ....stars kattiyachii....lights pottachi///jolly jolly jolly......///////////chirstmasvanthachuuuuuuuuuuuuuuuuuuuuuuuu////////anish thathaa innum christmas gift kodukala enakku.............

    ReplyDelete
  20. @kalai: நன்றி...!

    அது கிறிஸ்துமஸ் தாத்தாங்க... உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? எனக்கும் யாரும் இன்னும் கிறிஸ்துமஸ் gift தரல... :(( :((

    ReplyDelete