30 Dec 2011

நிரந்தர காதலி !


அப்பா அடிக்கடி
அன்பாய் சொல்லியும் - உன்னை
விட்டுவிலகவில்லை நான்...!

தினமும்
ஆயிரம் முறை
அம்மா திட்டியும்,
உன்னை இழக்க
உடன்படவில்லை மனது...!

ஆனால் அவள்
பலமுறை சொன்னதும்
படுபாவி நான்,
உன்னை என்னிலிருந்து
தூக்கிப்போட்டேன்...!

இன்று அவளோ
என்னை தூக்கிப்போட்டுவிட்டு
தொலைதூரத்தில் எங்கோ
தொலைந்து போய்விட்டாள்...!

மறுபடியும் மனது
உன்னையே தேடுகிறது...!

இன்னொருமுறை உன்னிடம் நான்
என் இதயம் தொலைத்தால்,
என்னை பழிவாங்க எண்ணி,
என் நுரையீரல் சுவர்களில்
உன் கறுப்பு எச்சில்களை
காரி உமிழ்ந்துவிடாதே....!

என் விரல்களை கோர்த்தபடி,
என் உதடுகளில் உரசியபடி
என் உயிர் மூச்சோடு மட்டும்
கலந்துவிடு ...!

சிகரெட் என்னும்
என் நிரந்தர காதலியே...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

20 comments:

  1. காதலர்கள் காதல் தோல்விக்குப் பின் சிகரெட் அதிகம் குடிப்பதன்
    காரணம் இப்படியும் இருக்கலாமோ ?
    சொல்லிச் சென்றவிதம் அருமை
    பகிர்வுக்கு நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. starting etho girl kaga eluthiringannu ninaichen ..naduvil suththamaa puriyala ...kadaisi line padichchathukku appurathaan judge panninen ...
    really superbaa irukku...

    very good...

    ReplyDelete
  3. hey wishing you a very very happy new year to u and ur family..

    ReplyDelete
  4. kalagal anish.. nice anish.. ipadi oru reason cigarete pidika.. neenga kuda appadi thano..

    ReplyDelete
  5. wish you ANIand to all Readers a very happy 2012
    :)

    ReplyDelete
  6. உண்மைதான் நிஜக் காதலியைவிட சிகரெட் காதலி உண்மையான காதலிதான்... உங்களுக்குள்ளேயே புகுந்து குடிகொண்டு விடுவா நோயாக...:A:A:A:A.

    ஆண்டவரே!!! வரும் புதுவருடத்திலயாவது கவிக்காவுக்குக் காதல் வந்திடாமல் பார்த்துக்கொள்ளப்பா... தொல்லை தாங்க முடியல்ல:R:R:R:R:R

    ReplyDelete
  7. பாவம்பா!சிகரெட்!அத்த வுட்டுரு!

    ReplyDelete
  8. iniya puthu varuda nal valuthugal anish..

    ReplyDelete
  9. நைனா கவிதை செம கலக்கலா இருக்கு நைனா ...
    அப்டியே மனச இழுத்துக்கின்னு போவுது வரிகள் ..
    ஜோரா கைத் தட்டுறேன் நைனா .. காதுல விழுவுதா ,,
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. @Ramani: வாங்க ஐயா...

    உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...!

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  11. @anishka nathan: உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...!

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  12. @கலை: கடைசியா கவிதை புரிஞ்சுதுல..?? :U:U:U:U:U

    உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...!

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  13. @kilora: ஹலோ சின்ன பையன்கிட்ட கேக்குற கேள்வியா இது? :R

    உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...!

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  14. @athira: அச்சச்சோ நீங்க சொல்றதை பார்த்தா வருடாவருடம் தீபாவளி, பொங்கல் வர்ற மாதிரி, எனக்கு வருடாவருடம் காதல் வந்திட்டு இருக்குனு பார்க்குறவங்க தப்பா நினைச்சுக்க போறாங்க...!! :A:A

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  15. @சீனுவாசன்.கு: விட்டுட்டாபோச்சு... ;)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  16. @அரசன்: நீங்க கைதட்டுறது காதுல உளுது...

    இங்க வந்துகினு, கமெண்ட்ஸ் போட்டுகினு போறதுக்கு ரம்ப தேக்ஸ்...

    ReplyDelete
  17. adadaa !
    kaathal entra ontrai
    eppadiyellaam !
    vaazhthukkal!

    ReplyDelete
  18. @Seeni: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...!

    ReplyDelete
  19. நிரந்தர காதலி....எனக்கும் சிகரெ ட் தான்

    ReplyDelete