13 Dec 2011

பொய்த்துப்போனவைகள்...


உன் மடியில்தான்
உயிர் விடுவேன் என சொன்ன
உன்னை நான்
கட்டியணைத்து
கண்ணீர் துடைத்தது - எனக்கு
இன்னும் ஞாபகமிருக்கிறது...!

காதலித்தவனை
கழற்றிவிட்டு செல்லும்
மற்ற பெண்களை போல்
என்றுமே நீ இருப்பதில்லை என
அன்று நீ சொன்னதையும்
நான் ரசித்து நின்றேன்...!

என்ன வந்தாலும்,
வானமே இடிந்தாலும்
வாழ்வது உன்னோடுதான் என
நீ பேசிய வார்த்தைகள்
நீண்ட நாட்கள் தாண்டியும்
இன்றும் என் காதில் ஒலிக்கிறது...!

உன் வார்த்தைகள் அனைத்தையும்
நம்பிக்கொண்டிருந்த என்னால்
இன்னும் நம்பமுடியவில்லை...!
உன் காதலோடு சேர்த்து
உன் வார்த்தைகளும்,
உன் வாக்குறுதிகளும் - இன்று
பொய்த்துப்போய்விட்டது என்பதை...

----அனீஷ் ஜெ...SHARE THIS

21 comments:

 1. பல காதல்களின் முடிவுரை இப்படிதான் தல இருக்கின்றது ,..
  ஆழ் கடலின் நடுவே பயணிக்கும் காதல்களில் சிலது மட்டுமே கரையை சேருகின்றன .
  மற்றவை அனைத்தும் மரணிக்கபடுகின்றன ...

  கவிதையின் நடை சிறப்பு ,, வாழ்த்துக்கள் தல ..

  ReplyDelete
 2. @அரசன்: ஹ்ம்ம்ம்... சரியா சொன்னீங்க தல...

  வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி... :)

  ReplyDelete
 3. ani... sandehataku marundu elle epadi sandeham vendam ellam nalladuku dan nadakum...anda kadali ennum kadalipal kadal ku end kidayadu nammbikai erukanam...:)

  ReplyDelete
 4. பெரும்பாலான காதல்கள்
  இதுபோன்ற நல்ல கவிதைகள்
  உலகுக்கு கிடைக்கட்டும் என்பதற்காக மட்டுமே
  துவங்கி முடிகின்றனவோ எனக் கூட
  எண்ணவேண்டி இருக்கிறது
  அருமையான படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. எல்லாம் அரசியல் வாக்குறுதிபோலத்தான்... அதை நம்பி, கண்டது நிண்டதெல்லாம் வாங்கிக்கொடுக்கும் உங்களுக்குத்தான் நல்ல அடி தரோணும்:A:A:A:A

  ReplyDelete
 6. எழுத்துப் பிழை இருக்கிறது கவிக்கா... 1000 பொற்காசுகள் தரமுடியாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. 2ம் வரி உயிர்......

  ReplyDelete
 7. @anishka nathan: யாரை காதலிப்பாள்னு தெரிஞ்சுக்கலாமா? ;);)

  வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

  ReplyDelete
 8. @Ramani: வாங்க ஐயா...! :)

  புல்லரிக்க வச்சிட்டிங்க... :) இப்படிலாம் பகழப்படாது.. ஓகேய்??? ;);)

  வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

  ReplyDelete
 9. @athira: எனக்கும் அப்படிதான் நினைக்க தோன்றுகிறது...!

  அடியா???? நான் யாருக்கும் எதுவும் “வாங்கி” கொடுக்கலைங்க... :R:R:R:R:R

  எழுத்துப்பிழை சரி செஞ்சுட்டேன்.. நன்றி... :)

  வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

  ReplyDelete
 10. ani adu secret enge solla mudiyadu..sollava enge? anumadi unda?

  ReplyDelete
 11. @anishka nathan: இங்கே யார் எதை வேண்டுமானாலும் சொல்லலாம்

  நன்றி...

  ReplyDelete
 12. இப்படி கவிகள் கிடைக்குமானால் எத்தனை தோல்வியை வேணும்னாலும் தாங்கலாமோ?
  :X

  ReplyDelete
 13. @கோகுல்: வாங்க நண்பரே...!

  உணர்சி வசப்பட்டு வார்த்தை விடாதீங்க.. "சில” தோல்விகளை எல்லாம் தாங்குறது ரொம்ப கஷ்டம்...:(

  வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா... :)

  ReplyDelete
 14. eppo paarthaalum ponnugal thaan emattruraangala ...pasangal emaattruvathu kidaiyathaaa,.....

  emaara aal irukkum varai emattram thodarnthu thaan irukkum .....

  kavithai nice,,,,

  ReplyDelete
 15. @கலை: என்னை சுற்றி நடக்கும், நான் பார்க்கும் காதல்களில் அதிகமாய் ஏமாற்றப்படுவது ஆண்களா தான் இருக்காங்க...அதைதான் எழுதிருக்கேன்...!

  நீங்க சொன்ன டயலாக்குக்கு ஒண்ணு சொல்றேன்...! ”யார் மேலயும் நம்பிக்கை இல்லாம இருக்குறதுக்கு, சிலர் கிட்ட ஏமாறலாம்...”

  நான் யார் கிட்டயும் ஏமாறாம இருப்பேன்னு சொல்றவன், யார் மேலயும் நம்பிக்கை வைக்காதவன்னு அர்த்தம். நம்ம மேல நம்பிக்கை இல்லாத ஒருத்தர் காட்டும் அன்பிலும் உண்மை இருப்பதில்லை. அது எந்த உறவானாலும் சரி...
  யோசிங்க புரியும்...

  வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி !!

  ReplyDelete
 16. arumaiyana varigal.. kadhal enge poithu ponathu.. avangalodu irundha natgal poithu poguma.. varthaigal poithu ponathu endru romba theriyuthu antha vali ana.. ellorudaiya ethirpaiyum meeri kadhal vetri petra athoda nenaivugal illamale poidum than kadhal eppothum tholvilaiye mudiyutho.. valigalin variyil varthaigal ellam alamana manathil irundhu valimaiyana eluthugal.. valthugal nanbare.

  ReplyDelete
 17. கலக்குறிங்க அனீஷ் பாராடுக்கள்

  ReplyDelete
 18. @kilora: சிலசமயம் காதலும் பொய்த்து போகும்...!!! okay???
  நினைவுகள் கிடைக்க வேண்டும் என்பதற்க்காக காதலை பிரியலாம் என சொல்றீங்களா..?

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

  ReplyDelete
 19. @தமிழ்த்தோட்டம்: வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

  ReplyDelete
 20. oru pen indha alavukku poi solla kudadhu friend

  unmaikkum ,,,vaaimaikkum,, muzhu utharanamagaa irukkanum pengal

  itha kavithaiye paarppavunga ippadi irukka kudadhu

  by

  livina

  ReplyDelete
 21. @Anonymous: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

  ReplyDelete