
மனதை நான்
மடித்தெங்கோ வைத்துவிட்டேன்...!
இடப்பக்க இதயம்
இயங்குவதின் அசைவில்லை...!
மூளைய தூக்கியெறிந்துவிட்டு
முட்டாள்போல் அலைகின்றேன்...!
பசி மறக்க
பழக தொடங்கிவிட்டேன்...!
பக்கத்திலிருந்து பேசினாலும்
பதியவில்லை செவிகளில்...!
தனியே பேசவும் சிரிக்கவும்
தயக்கமில்லை இப்போது...!
மனிதத்தை களைந்துவிட்டு
மற்றெதுவாகவோ மாறுவதாய் உணர்வு...!
இத்தனை சக்தியா...?
நீ தரும் காதலுக்கு...
----அனீஷ் ஜெ...
Send Your Comments on Whatsapp. Click Here
அருமை! பாராட்டுக்கள்!
ReplyDeleteLoil
ReplyDeleteஅருமையான கவிதை
ReplyDeleteஅருமை
ReplyDeleteஉன் நினைவில் இருந்த நான்...இந்த ஜேன்மத்தில் என்நினைவுக்கு திரும்ப போவதில்லை ஏன் என்றால்...இந்த ஜேன்மம் உன்னை நினைத்து சுவாசித்த ஜேன்மம் ம.கணேஷ் முர்த்தி
ReplyDeleteSuper brother
ReplyDelete