6 May 2011

உயிர் இரண்டும் ஒன்றாக...

Scan me!

உன் கன்னத்தோடு உரசி,
உன் கால் கொலுசோடு பேசி
நான் வாழ்ந்து முடிக்க வேண்டும்...!

காற்றுக்கே உயிர் தரும் உன் மூச்சினில்,
காற்றில் இசையாகும் உன் பேச்சினில்
நான் என் ஆயுள் வளர்க்க வேண்டும்...!

உன் பார்வை என் உயிர் குடிக்க,
என் மனசு மெல்ல சிறகடிக்க
நான் உனக்குள் பறக்க வேண்டும்...!

என்னை கண்டதும் நீ சிரிக்க,
வார்த்தையாய் அதை நான் கிறுக்க - அந்த
வரிகளில் நீயே கவிதையாக வேண்டும்...!

உன் நெஞ்சோடு சாய்ந்து,
உன் உடலோடு தேய்ந்து
நான் உனக்குள் உருக வேண்டும்...!

முல்லை தாங்கும் உன் கூந்தலில்,
எல்லை தாண்டும் என் தீண்டலில்
நம் இரவுகள் விடிய வேண்டும்...!

புள்ளியாய் நீ போடும் கோலத்தில்,
ஈர குடையாய் மழைக்காலத்தில்
நான் உன் வாசலில் முளைக்க வேண்டும்...!

இரவு வந்தால் கனவாக,
இதயம் முழுதும் நினைவாக
நீ எனக்குள் வாழ வேண்டும்...!

என் விரல் தொடும் தூரத்தில்,
நான் நினைத்திடும் நேரத்தில்
என் அருகில் நீ வேண்டும்...!

நான் என்பவன் உனக்காக,
நீ இங்கு எனக்காக என - நம்
உயிரிரண்டும் ஒன்றாய் கலக்க வேண்டும்...!

----அனீஷ் ஜெ...
SHARE THIS

9 comments:

  1. Varthaikal uyir perukintana un kavithai varikalil.....

    Penavai edukka thoondukirathu un tamil kirukkalkal....

    Nice....

    Keep it up!!

    ReplyDelete
  2. மை டியர் நண்பா Edwin ! ரொம்ப நன்றி !!

    ReplyDelete
  3. anishka nathanMay 10, 2011 2:24 pm

    anda siripu romba kudutu vechueruku:)))))))))))))

    ReplyDelete
  4. கவிதை + கற்பனை + நிஜம் + சந்தோசம் + கவலை... அனைத்தும் சூப்பர்....

    ReplyDelete
  5. உயிரிரண்டும் ஒன்றாய் கலக்க வாழ்த்துக்கள்...

    ஊ.கு: 2012 க்குப் பிறகு....:)))

    ReplyDelete
  6. @anisha nathan: ஓஓ அப்படியா? :P
    ரொம்ப நன்றி...!!

    ReplyDelete
  7. @athira: உயிர்.... 2012... ஐயய்யோ... எது எது கூட கலக்கபோகுது தெரியலையே...! இதுக்கு நீங்க வாழ்த்தாமலே இருந்திருக்கலாம்...! :)
    கருத்துக்கு ரொம்ப நன்றி...!!

    ReplyDelete
  8. very nice Anish... i got goose bumps while reading it...
    Kalakureenga...!
    :X :X :X
    :C :C :C

    ReplyDelete
  9. @Kaavya : ரொம்ப நன்றி...! :)

    ReplyDelete