22 Dec 2011

இனி எப்பொழுது?


உன் குரலை
காற்று இன்னும் என்
காதில் சொல்லவில்லை...!

உன் நிறமென்ன என்று
வானவில் என்னிடம்
வந்து சொல்லவில்லை...!

அழகாய் இருப்பாயா..?
அதிகம் பேசுவாயா...???
தென்றலாய் சிரிப்பாயா..?
தேவதை போல் இருப்பாயா...??

எனக்கு உன்னை பற்றி
எதுவும் தெரியாது...!
எழுத்தில் நீ சொன்னால் கூட
எனக்கு எதுவும் புரியாது...!!

கற்பனையில் மட்டுமே
நான் உன்னை காண்கிறேன்...!
கனவில் மட்டுமே
உன் குரல் கேட்கிறேன்...!!

உன் கோபங்கள்...!
உன் சிரிப்புகள்...!
அத்தனையும்
வெறும் எழுத்துகளாக,
அதையே நான் ரசிக்கிறேன்...!

கணினி திறந்து,
கண்கள் வெறித்து
காத்துக்கொண்டிருக்கிறேன் நான்...!
இனியெப்பொழுது - நீ
இதிலே தெரிவாய்...?

என் இணையத் தோழியே...

----அனீஷ் ஜெ...

SHARE THIS

23 comments:

  1. v nice poem

    ReplyDelete
  2. @anishka nathan: வருகைக்கும், கருத்துக்கும் நன்றி !

    ReplyDelete
  3. அருமை அருமை
    கண்களுக்கு குளிர்ச்சியான முகப்பு
    மனதுக்கு இதமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. @Ramani: வாங்க.. வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  5. hey romba superaa irukku ....kalakkunga ......

    katru poi engaavathu sollumaa,,call pannunga solluvaanga......

    ReplyDelete
  6. @கலை: அட நீங்க இயற்பியல் மாணவி தானே...? காற்றில்தான் ஒலி பரவும் என கற்றுக்கொடுக்கலையா? அதெப்படி கிளாஸ் கவனிக்காம கடலை போட்டுகிட்டு இருந்தா இப்படிதான் இருக்கும்.. :A:A:A:A:A அய்யோ அய்யோ.....

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! ;)

    ReplyDelete
  7. ம்ம்ம் ... கவிதை கலக்கல் தல ...
    வாழ்த்துக்கள் உங்களுக்கும் , அந்த இணைய தோழிக்கும் ...

    ReplyDelete
  8. @அரசன்: தல நீங்க நினைக்குற மாதிரி இந்த கவிதை குறிப்பிட்ட யாருக்காகவும் நான் எழுதல... சும்மா எழுதணும் தோணிச்சு...so எழுதிட்டேன்...! :)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  9. super anish .. arumaiyana kavithai.. neenga yar kittayo paathika pattu irukinga nu theriyuthu.. first few lines romba romba nalla iruku..

    ReplyDelete
  10. @kilora: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி !!

    ReplyDelete
  11. ம்ம்ம்ம்ம்ம் நான் வந்திருக்கிறேன்:R:R:R:R:R:R

    ReplyDelete
  12. கவிதை அண்ட் கற்பனை கலக்கல்...

    ஆனா அழகாய் இருப்பாயா, குயிலாய் கூவுவாயாய் என்றெல்லாம் கேட்டிட்டு, நேரில பார்த்ததும் ஓடிப்போய்த் தண்டவாளத்தில தலைவைத்திடாதீங்க... ஓக்கை... முன்னெச்சரிக்கையாச் சொல்லிட்டேன்...

    பிறகு கவிக்காட கவிதைக்கு நாங்க எங்குதான் போவது...:R:R:R:R:R

    ReplyDelete
  13. அதிராவை நம்பினாலும், இணையத் தோழிகளை நம்பிடாதீங்க ஓக்கை? ஏன் முறைக்கிறீங்க? நான் இப்போ என்ன சொல்லிட்டேன்..:((:((:((

    ReplyDelete
  14. @athira:
    //ஆனா அழகாய் இருப்பாயா, குயிலாய் கூவுவாயாய் என்றெல்லாம் கேட்டிட்டு, நேரில பார்த்ததும் ஓடிப்போய்த் தண்டவாளத்தில தலைவைத்திடாதீங்க...//
    ஹாஹா ரொம்ப சிரிச்சேன்...!
    சமீபத்தில்தான் இப்படி தண்டவாளத்தில் தலை வச்ச ஒருத்தரோட கதையை நியூஸ் பேப்பரில் படிச்சேன்...! அய்யோ அய்யோ...!:A:A
    இதுக்கெல்லாம் நான் தண்டவாளத்தில் தலை வைக்க மாட்டேங்க...! ஏன்னா நான் ஆல்ரெடி முன்னெச்சரிக்கையாதான் இருக்கேன்...!


    //அதிராவை நம்பினாலும், இணையத் தோழிகளை நம்பிடாதீங்க ஓக்கை? //
    நான் யாரையும் “எளிதில்” நம்புறதில்லீங்க.... ;)

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  15. correct..yaarayum nambadheenga...and kathuttum irukaadheenga

    ReplyDelete
  16. ean na neenga kanini thirandhu kangal verithu kaathuttu irukka alavukku unga thozhi worth illa nu thonudhu....

    ReplyDelete
  17. @Anonymous: நீங்க சொல்றது எனக்கு புரியுதுங்க...!
    நாம ஒருத்தரை இவங்க மற்றவர்களை மாதிரி இல்லைனு நினைச்சாலும், சில விஷயங்களில் அவங்களும் மற்றவர்களை போலதான் இருக்காங்க...! இதுக்கு எதுவும் பண்ண முடியாது...!

    நீங்க சொல்ல வேண்டியதை உங்கள் உண்மையான பெயரில் சொல்லிருந்தாகூட நான் தப்பா நினைச்சிருக்கமாட்டேன்...!

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

    ReplyDelete
  18. கவிதை மிக அழகாய் இருக்கிறது என்றாவது ஒருநல்ல தோழி கிடைப்பாள் ..........

    ReplyDelete
  19. @நிலாமதி: வாங்க...! :)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!!

    ReplyDelete
  20. friend kavithai alagagavum ,arumaiyagavum ulladhu

    happy merry cristmas

    ReplyDelete
  21. @Anonymous: உங்களுக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்...!

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!!

    ReplyDelete
  22. இனி எப்பொழுது ? என்ற கவிதை உங்கள் தோழியே நீங்கள் அன்பாக ,பாசமாக , தேடுறிங்க
    ,என்று மையமிட்டு காட்டிகிறது ?

    by


    livina

    ReplyDelete
  23. @livina: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete