5 Dec 2011

உன்னை சந்தித்த பொழுதில்...


எத்தனையோ நாளுக்குப்பின்,
எதிர்பாராத விதமாய்
நான் உன்னை இன்று
கடைத்தெருவில் சந்தித்தேன்...!

திடீரென பார்த்தாலென்னவோ
அடிநெஞ்சில் எனக்கு
அதிர்ச்சியின் அலைகள்...!
உனக்கும்தான்...

என் முகத்தையே பார்த்து நின்ற
உன் முகம் கண்டதும்
நான் முகம் திருப்பினேன்...!

உன் பார்வையில்
என்மேல் ஏதோ
பரிதாபம் தெரிந்தது...!

உனக்கு எதிர்திசையில்
வேகமாய் விலகி நடந்தேன்...!

பாதி தூரம் சென்றபின் - என்
பாதி மனது சொன்னது
உனது அருகில் வந்து
நலம் விசாரித்திருக்கலாம் என்று...

ஆனாலும் ஏதோ ஒன்று தடுக்க
அப்படியே வெகுதூரம் நடந்து
உன்னை விட்டு மறைந்தேன்...!

உன்னிடம் நான் ஓடி வந்து
நலமா என கேட்பேன் என
நீ எதிர்பார்த்திருக்கலாம்...!

ஆனால்...
உன்னருகில் நான் வந்து
நலமா என கேட்டால்,
நீ யாருக்கோ பயந்து
நீ யார் என திருப்பி கேட்டால்,
உன்னிடமும்,
உன்னருகில் நிற்கும்
உன் கணவனிடமும்,
நான் எப்படி சொல்வது?

என்றோ ஒரு நாள் - நீ
ஏமாற்றிவிட்டு சென்ற - உன்
முன்னாள் காதலன்தான்
நான் என்று...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

22 comments:

  1. அடடா..... சூப்பர்.... ஆனா உண்மையில் ஏதும் நிகழ்ந்துவிட்டதோ இப்படி? செ..சே.. இருக்காது, கவிக்கா ரொம்ப நல்லபிள்ளை ஆச்சே:R:R:R

    ReplyDelete
  2. @athira: ஹாஹா நான் நல்ல பிள்ளைனு உங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா?? ;);)
    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  3. அது சும்மா ஒரு கதைக்கு நல்லபிள்ளை எனச் சொன்னேன்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. அதை உண்மை என நம்பி நன்றியெல்லாம் சொல்லுறீங்க அவ்வ்வ்வ்வ்வ்:)))))

    ReplyDelete
  4. என்னோடு பேச
    Offline///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 24 மணித்தியாலமும் இதையேதான் சொல்லுது, பிறகெதுக்கு இதை வச்சிருக்கிறீங்க கவிக்கா? தூக்கி கடலுக்க வீசிடுங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:S:S:S:S

    ReplyDelete
  5. @athira: ஓஓ சும்மாதான் சொன்னீங்களா? அப்போ உங்களுக்கு உண்மைதெரியாதா...? ஹ்ம்ம் அப்படினா இப்போ தெரிஞ்சுக்கோங்க...! நான் ரொம்ப ரொம்ப நல்ல பையனாக்கும்...! தூங்கும்போது மட்டும்... :R:R

    நன்றி...! :)

    ReplyDelete
  6. @athira: நான் online இருந்தா எனக்கு தெரிஞ்ச யாரும் வர்றதே இல்லை.. :(( அதான் இதை நான் login பண்றதே இல்ல...:(( :((

    நன்றி...!

    ReplyDelete
  7. ஆமாம்.காதல் தோல்வியை விட நீ யார் என கேட்டால் அந்த வலி தாங்க முடியாதது.
    இது அனுபவமல்ல,அறிந்தது(கேட்டு)அவ்வவ்

    ReplyDelete
  8. kavithai superb...

    aanal neenga ithu eppovoo ezthuninathunu ninaikkiren,

    athusari ippudi emattrina pullaiyaa paarththu maranjinkonaa neenga unga ooru kaara pullaiga ellar paarththumbla maranji poganum...

    by god grace antha pillaikku oru nalla vazkkai kidaichchirukku,,,,,

    ReplyDelete
  9. சூப்பர் அனிஷ் .. அனுபவிச்சி எழுதுனதோ.. இல்ல அவங்க நெனைப்புல வேற யாரையோ பார்த்து அவங்க நெனைச்சு வந்துடிங்கள.. பாத்து அனிஷ் அவங்க நெனைப்புல யாரரவது தெரிஞ்சவங்க பார்த்துட்டு அவங்க நெனைச்சு தல தெறிக வர போறீங்க.. parthu poidu vanga.. nalla iruku.. ellam kalanthu iruku.. super..

    ReplyDelete
  10. ரசிக்க வாய்த்த கவிதை..வாழ்த்துக்கள் அனீஸ்...

    ReplyDelete
  11. @கோகுல்: மெய்யாலுமா பாஸ்? நம்பிட்டோம்... ;);)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி பாஸ்... :)

    ReplyDelete
  12. @kalai: இது எப்பவோ எழுதினது இல்லை... இன்னிக்கு எழுதினதுதான்...! அதுவும் நடு ராத்திரி...! :D

    எங்க ஊரில் நான் தூங்கும்போது மட்டுமல்ல, முழிச்சு இருக்கும்போது கூட நல்ல பையன்தான்...! குனிஞ்ச தலை நிமிர்ந்து ஊரில ஒரு பொண்ணை கூட பார்க்க மாட்டேன்... ;);)

    நீங்க எதோ ஒரு பொண்ணை பற்றி சொல்றீங்க...! அவங்க யாருனு எனக்கு புரியல...! நீங்க சொல்ற அந்த பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கணும் அப்படிங்குறதுதான் எனது விருப்பமும்...

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

    ReplyDelete
  13. @kilora: அவங்க அவங்கனு யாரையோ சொல்றீங்களே, எவருங்க அவங்க? எனக்கு புரியல... :Y:Y

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)

    ReplyDelete
  14. @ரெவரி: வாங்க நண்பரே... :)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)

    ReplyDelete
  15. hmmmm nice ani c

    ReplyDelete
  16. @anishka nathan: ஹம்ம்ம்ம்..

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!!! :)

    ReplyDelete
  17. காதலின் வலி கவிதை நெடுக பயனித்திருக்கின்றது ..
    வரிகளில் வலிமை கூடி உள்ளது தல ...
    வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  18. @அரசன்: வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி தல... :)

    ReplyDelete
  19. முன் காதலை வெளிபடுத்திய முறை அருமையோ அருமை ....

    by

    livina

    ReplyDelete
  20. @livina: வருகைக்கும், கருத்துக்கும், மிக்க நன்றி...!

    ReplyDelete
  21. romba feel panniteenga pola anish? ila anubavama...?...

    ReplyDelete
  22. @shamilipal: எப்படி வேணும்னாலும் வச்சுக்கலாம்.. ;)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete